சின்ன மருமகள் சீரியலில் தமிழ் செல்வியின் கனவில் சேதுவின் அம்மா வந்து தமிழ் கிட்ட பேசுறாங்க. தமிழ் நீ விவாகரத்து கொடுத்துராதம்மா. நான்தான் உன் வயித்துல வளர்றேன். நீ மட்டும் விவாகரத்து கொடுத்துட்டா என்னோட மகன் கூட நான் திரும்ப சேர முடியாது. அதுமட்டுமில்லாம சேதுவை உன்னை தவிர வேற யாராலும் நல்லா பாத்துக்க முடியாது. அதனால யாரு என்ன சொன்னாலும் விவாகரத்து மட்டும் கொடுத்துராம அப்படின்னு சேதுவின் அம்மா தமிழ் கனவுல வந்து சொல்கிறாள்.
இன்னொரு பக்கம் சேதுவின் மனசாட்சி தமிழ் நல்லவள் விவாகரத்து கொடுக்காத. தமிழ் உனக்கு செஞ்ச நல்லது எல்லாத்தையும் நினைச்சு பாரு அப்படின்னு சேது கிட்ட சொல்லுது. அப்பொழுது இன்னொரு மனசாட்சி வந்து தமிழ் ரொம்ப கெட்டவ அவளுக்கு விவாகரத்து கொடுத்துரு. அவளை விட்டு பிரிஞ்சிரு அப்படின்னு இன்னொரு மனசாட்சி சொல்லுது. இப்படி இரண்டு விதமா சேதுவின் மனசாட்சி ஒன்னு நல்லதுன்னு சொல்லுது ஒன்னு கெட்டதுன்னு சொல்லுது. அதனால் என்ன செய்ய தெரியாம சேது குழம்பி இருக்கான்.
தமிழ் எதுக்காக சேதுவை பிரிஞ்சி இருக்காங்க அப்படிங்கிறதை தெரிஞ்சுக்கணும் அப்படின்னு தமிழ் பழைய காதலன் சக்தி தமிழை பற்றி விசாரிக்கிறார். தமிழ் மேல எந்த தப்பும் இல்லை. எல்லாம் சேது மேலதான் தப்பு அப்படின்னு இந்த சக்திக்கு தெரிய வருது. இதற்கு முக்கிய காரணம் சேது அதை சாவித்ரி என்றும் தெரிய வருது.
இதற்கிடையில் சேது தமிழுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புகிறான். அதற்கு தமிழ் செல்வி தன்னுடைய வக்கீல் மூலம் எனக்கு சேதுவோட சேர்ந்து வாழ விருப்பமில்லை ஆனால் டைவர்ஸ் நோட்டீஸ் கொடுக்க மாட்டேன். சேதுவிடம் இருந்து எனக்கு எந்த ஒரு settlement-ம் வேண்டாம். எனக்கு புருஷன் வேண்டும் என நான் நினைக்கல ஆனால் என் குழந்தைக்கு அப்பா வேண்டும் என தமிழ்செல்வில் வக்கீலிடம் கூறினாள். சேது குடும்பத்திற்கு இந்த விஷயம் தெரிந்ததும் ராஜாங்கம் கோபப்படுகிறான்.
சாவித்திரி தமிழ் ஏன் விவாகரத்து கொடுக்க மாட்டிங்கிறாள் அவள் இந்த சொத்தில் பங்கு வேண்டும் சொல்றாளா என்று கேட்டவுடன் வக்கீல் தமிழ் settlement வேண்டாம் என்று தான் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் என சொல்கிறார். இதனால் சேதுவின் பாட்டி, அம்மா, மலர் எல்லாரும் ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும், தமிழ் விவாகரத்து கொடுக்கவில்லை என்றால் தாமரையை சேதுவிற்கு கல்யாணம் செய்து வைக்க முடியாத வருத்தத்தில் சாவித்திரி கவலைப்படுகிறாள்.