தமிழகத்தை உலுக்கிய 5 லாக்கப் மரணங்கள்.. குலை நடுங்க வைத்த சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம்! – Cinemapettai

Tamil Cinema News

TN Custodial death: போலீஸ் சாதாரண விசாரணைக்கு கூப்பிட்டாலே கொலை நடுங்கும் அளவிற்கு தற்போது லாக்கப் மரணங்கள் மிரட்டி கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுவரை நடந்த மோசமான ஐந்து லாக்கப் மரணங்களை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

5 லாக்கப் மரணங்கள்

சாத்தான்குளம்: லாக்டவுன் சமயத்தில் நடந்த பேரதிர்ச்சியான சம்பவம்தான் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் மரணம் தான். லாக்டவுன் விதி மீறல் என்று போலீஸ் கஸ்டடிக்கு சென்ற இந்த தந்தை மகன் இருவரும் போலீசாரால் கடுமையான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இயற்கை துவாரத்தில் இருந்து ரத்தம் வரும் அளவுக்கு அடிக்கப்பட்டு இருவருமே இறந்து விட்டார்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ஆரம்பித்த இந்த வழக்கிற்கு இன்று வரை ஒரு முடிவு கிடைக்கவில்லை.

திருப்புவனம்: ஒன்பதரை சவரன் நகை திருட்டு போன கேசில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித் குமார் இரும்பு கம்பிகள், பைப்புகள் உடையும் அளவிற்கு அடிக்கப்பட்டிருக்கிறார். மிளகாய் தூளை நேரில் கரைத்து வாயில் ஊற்றியதாக கூட சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் விக்கல் ஏற்பட்டு குடிக்க கூட தண்ணி இல்லாமல் உயிர் பிரிந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருந்த போதிலும் போலீசார் இடம் இருந்து தப்பிக்க முயன்ற போது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என மருத்துவ அறிக்கை வெளியாகி இருக்கிறது.

விழுப்புரம்: கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விழுப்புரத்தில் ராஜா என்பவரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்திருக்கிறார்கள். குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்த போதிலும் அவர்களை விரட்டி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.

அன்று மாலை ராஜா வீடு திரும்பி இருக்கிறார். வீட்டிற்கு வந்து போலீசார் தன்னை எப்படி எல்லாம் கொடுமை செய்தார்கள் என்பதை சொல்லி அழுது கொண்டிருக்கும் போதே மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாக குடும்பத்தினர் சொல்லி இருக்கிறார்கள். போலீசார் உடனே மருத்துவமனைக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனையை 10 நிமிடத்தில் நடத்தி முடித்து, உடனே இறுதிச் சடங்குகளையும் செய்ய வைத்திருக்கிறார்கள்.

சென்னை: சென்னை சேர்ந்த விக்னேஷ் பயணித்த ஆட்டோ ரிக்ஷாவில் மது மற்றும் போ…தை பொருட்கள் இருந்ததால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு காலை உணவிற்குப் பிறகு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக சொல்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர். இந்த வழக்கில் ஆறு காவல் அதிகாரிகள் சிபி சிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்கள். இதற்கு காரணம் விக்னேஷ் உடம்பில் 13 இடத்தில் அதிகப்படியான காயம் இருந்தது தான்.

தென்காசி: தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பழனி என்பவர் கடம்பர 2023 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்ட இவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்ததாக முதலில் சொல்லப்பட்டது.

இருந்தாலும் மருத்துவ அறிக்கையில் தங்கசாமி உடம்பில் இருந்த ரத்த காயங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததால் இது லாக்கப் மரணம் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.