Coolie : லோகேஷ் கனகராஜ், ரஜினி கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. நாகர்ஜுனா, அமீர்கான் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் இந்த படத்தில் நடிப்பதால் படத்திற்கான ஹைப் அதிகமாக இருக்கிறது.
மற்றொருபுறம் கூலி படத்துடன் ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான வார் 2 படமும் வெளியாகிறது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் கடுமையான போட்டி நிலவ இருக்கிறது. இந்த சூழலில் கூலி படத்தில் ஓவர்சீஸ் பிசினஸ் அமோகமாக நடந்திருக்கிறது.
ஆரம்பத்தில் 80 கோடி முதல் 90 கோடி வரை வியாபாரம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் கிட்டத்தட்ட 68 கோடிக்கு வெளிநாட்டு திரையரங்க உரிமையை வாங்கி உள்ளது. இது மிகப்பெரிய தொகையாக தான் பார்க்கப்படுகிறது.
கூலி படத்தின் ஓவர்சீஸ் பிசினஸ்
மேலும் விஜய்யின் ஜனநாயகன் படம் 75 கோடிக்கு ஓவர்சீஸ் பிசினஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் 35 கோடியும், லியோ படம் 60 கோடியும், கோட் படம் 53 கோடியும் மற்றும் கமலின் தக் லைஃப் படம் 63 கோடியும் ஓவர்சீஸ் பிசினஸ் ஆகியிருந்தது.
இப்போது இவற்றைக் காட்டிலும் கூலி படம் அதிகமாக வியாபாரம் ஆகி இருக்கிறது. மேலும் தெலுங்கு மற்றும் ஆந்திரா ஆகிய இடங்களில் 52 கோடிக்கு படத்தை வாங்கி உள்ளனர். இதை ஆசிய சுனில் பெற்றிருக்கிறார். தெலுங்கு மாநிலங்களில் 30 கோடிக்கு மேல் விற்கப்பட்ட படங்களில் ஐந்தாவது இடத்தை கூலி படம் பெற்று இருக்கிறது.
கூலி படம் ரிலீஸுக்கு பின்பு பல சாதனைகளை படைக்க இருக்கிறது. இந்த ஆண்டு வெளியான மற்றும் வெளியாகும் படங்களில் அதிக வசூல் செய்யும் படமாக கூலி படம் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரம் நம்புகிறது.