Vijay : நடிகர் விஜய் அவர்கள் அரசியல்வாதி விஜய் ஆனதிலிருந்தே நிறைய நடிகர் நடிகைகள் விஜய் கட்சியில் சேரலாமா வேணாமா என்று, “மதில்மேல் பூனை போல” இருந்து வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வருவார் என்பது யாருமே முற்றிலும் எதிர்பார்க்காத ஒன்று.
அந்தவகையில் விஜய்க்குத்தான் எனது ஆதரவு என்று ஒரு சிலர் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றனர். இன்னும் சிலர் பேட்டிகளில் அல்லது சமூக வலைத்தளங்களில் தனது ஆதரவை விஜய்க்கு தெரிவித்தவண்ணம் இருந்து வருகின்றனர். இன்னும் பல நடிகர்கள் விஜய் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் நடிகர் விஷால் அவர்கள் ஒரு பேட்டியில் நானுமொரு வாக்காளர்தான் விஜய் அவர்கள் என்ன சொல்ல போகிறாரார் என கேட்க ஆவலாக இருக்கிறேன் என்று விஜய் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகை வனிதா விஜயகுமார் அவர்களும் என் ஆதரவு விஜய் அவர்களுக்கு தான் என கூறியுள்ளார்.
நடிகர் அருண் விஜய் அவர்களின் அரசியல் பயணம் நிச்சயமாக வெற்றி பயணமாக அமையவேண்டும் என வாழ்த்துகிறேன் என்று சமீபத்தில் பேட்டியில் கூறுவதன் மூலம் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறார் என நாம் அறிந்து கொள்ளலாம். நடிகர் லாரன்ஸ் அவர்களும் என்னுடைய நண்பர் விஜய் அவர் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என சில நாட்களுக்கு முன் கூறியிருப்பார். இதன் மூலம் இவர் விஜய்க்கு ஆதரவு என்பது புரிகிறது. நடிகர் நரேன் அவர்கள் விஜய் அவர்கள் அரசியலில் சாதிக்க விரும்புகிறார் எனவே நாம் அவரை ஆதரிப்போம் என்று ஆதரவு தெரிவித்திருப்பார்.
ஜெயலலிதா பாணியில் மூன்றெழுத்து நடிகை..
தற்போது சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வரப்போவதாக கூறி நடிகை த்ரிஷா அவர்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதாவது தனக்கு அரசியல் ஆசை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது முதலமைச்சர் ஆவதற்கு தனக்கு ஆசை உள்ளதாகவும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஆசையை விஜய் கட்சியின் மூலம் நிறைவேற்றி கொள்ள போகிறாரா என்றகேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது. ஜெயலலிதா பாணியை பின்பற்றுகிறாரா திரிஷா என பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
இதுபோல் மற்ற நடிகர், நடிகைகளும் விஜய்யின் “தமிழக வெற்றி கழகம்” கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தவண்ணம் இருந்துவருகின்றனர். விஜய் அவர்கள் நடிகனாக ரசிகர்களை கொண்டாடவைத்தது மட்டுமல்லாமல். அரசியல்வாதியாவும் தொண்டர்களை கொண்டாட செய்கிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என கருத்துக்கள் நிலவி வருகின்றன.