Surya Sethupathi: பெரும்பாலும் திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாலும் பிரபலத்தை பயன்படுத்தி வந்தார்கள் என்று தான் சொல்வார்கள்.
அப்படி இருக்கும் பட்சத்தில் மெல்லுற வாய்க்கு அவல் கொடுக்கிற மாதிரி தேவையில்லாத விமர்சனங்களில் சிக்கிக் கொள்கிறார் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி. விஜய் சேதுபதியின் மகன் ஹீரோ ஆகிறார் என்று செய்திகள் வெளியான போதே எல்லோருக்கும் ஆச்சரியம்.
சூர்யா சேதுபதியின் அட்ராசிட்டி
இதற்கு காரணம் ஒரு சில வருடங்களுக்கு முன்பு தான் முகில் மற்றும் சிந்துபாத் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். இந்த நிலையில் 19 வயதில் வீழான் திரைப்படம் மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார்.
போதாத குறைக்கு பட தொடக்க விழாவில் நான் வேற அப்பா வேற என்று எதுகை மோனையில் பேசி ட்ரோல் மெட்டீரியல் ஆனார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த வீழான் பட விழாவின் போது தான் பேசியது சர்ச்சையானது குறித்து மன வருத்தமும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் கொஞ்ச நேரத்தில் இவர் வாயில் சுவிங்கம் போட்டுக் கொண்டு மென்று கொண்டே மற்றவர்களிடம் பேசிய விதம், நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் பேசும் பொருளாகி இருக்கிறது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களாக கூட்டத்தில் ஒருவராக, துணை நடிகராக நடித்து இப்போது மக்கள் செல்வன் என்ற பெயருடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தான் பட்ட கஷ்டம் தன் மகன் படக்கூடாது என நினைப்பதெல்லாம் சரிதான்.
ஆனால் சினிமா போன்ற ஒரு ஆழ் கடலில் நுழைய இப்படி ஒரு எளிமையான வழியை போட்டுக் கொடுத்தது தான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது. மேடை ஒன்றில் என் அப்பா எனக்கு வாழ கற்றுக் கொடுத்தார் என்று பேசி இருப்பார்.
அதை கொஞ்சம் தன் மகனுக்கும் சொல்லிக் கொடுத்து, இவ்வளவு அவசர அவசரமாக சினிமாவுக்குள் நுழைவது எவ்வளவு பெரிய விபரீதத்தை கொடுக்கும் என்பதை புரிய வைத்திருக்கலாம்.