முன்பெல்லாம் அர்ஜுன் நடிப்பில் வருடத்திற்கு ஐந்தாறு படங்கள் ரிலீஸாகிவிடும். ஆனால் இப்பொழுது பெரும்பாலும் அர்ஜுன் படங்களில் தலை காட்டுவதில்லை. வருடத்திற்கு ஒரு படம் வருவதே அபூர்வமாகிவிட்டது. கடைசியாக அவர் பெரிய படம் விடாமுயற்சியில் நடித்தார்.
2024 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த மாதம் ஜீவா நடிப்பில் வெளியான அகத்தியா படத்தில் நடித்திருந்தார். ஏன் முன்பு போல் இவர் படங்களில் நடிப்பதில்லை என்பதை விசாரித்து பார்த்தால், படங்களை இயக்குவது மற்றும் தயாரிப்பது என்று வேறு ஒரு பாதையில் செல்ல ஆயத்தமாகி வருகிறார்.
தற்போது இவர் சீதா பயணம் என்ற ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதில் அவர் மகள் ஐஸ்வர்யா தான் ஹீரோயினாக நடிக்கிறார். இது புராண கால கதை கிடையாது. படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ஐஸ்வர்யாவின் பெயர் சீதா. அவர் பயணிக்கும் பாதையில் வரும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
அது மட்டும் இல்லாமல் அர்ஜுன், படம் தயாரிக்கவும் முயற்சி செய்து வருகிறார். அதற்காக சமீபத்தில் துபாய் சென்று பார்ஸ் ஃபிலிம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அடுத்து இவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார் அதற்காக அவருக்கு தூதுவிட்டுள்ளார்.
மேலும் அந்த படத்தை அவரே இயக்கும் முடிவிலும் இருக்கிறார். இவருக்கும் விஜய் சேதுபதிக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. கூடிய விரைவில் இந்த காமினேஷனில் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீதா பயணம் படத்தை முடித்த பிறகு இந்த படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.