Ajith-Shalini : சூர்யா ஜோதிகா, குஷ்பூ சுந்தர் போன்ற பிரபலங்கள் நிறைய படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றி அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரே ஒரு படத்தில் நடித்து திருமணம் செய்து கொண்ட நான்கு ஜோடிகளை இப்போது பார்க்கலாம்.
அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதலித்தனர். ஒரு காட்சியில் எதார்த்தமாக அஜித்தால் ஷாலினி கையில் காயம் ஏற்பட்டு விட்டது. இதை அஜித் அக்கறையுடன் கவனித்த தினமும் விசாரிக்கையில் அது அப்படியே காதலாக மாறிவிட்டது.
2000 ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்ற குழந்தைகள் உள்ளனர். இப்போது அஜித்துக்கு 54 வயதாகும் நிலையில் தற்போதும் இவர்களின் காதல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. வருடங்கள் ஆக ஆக இன்னும் இவர்களுக்குள் காதல் அதிகமாகிக் கொண்டே போகிறது.
ஒரே படத்தில் ஜோடியாக நடித்து திருமணம் செய்த 4 நடிகர்கள்
அடுத்ததாக மரகத நாணயம் படத்தில் நடித்ததன் மூலம் நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு இருவரும் 2022 ஆம் ஆண்டு பிரபலங்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் கஜினிகாந்த் படத்தில் நடித்திருந்தனர். அப்போது காதலித்த நிலையில் இருவரும் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆர்யா மற்றும் சாயிஷா இருவருக்கும் கிட்டத்தட்ட 16 வயது வித்தியாசம் உள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு பிறகு காப்பான் மற்றும் டெடி ஆகிய படங்களில் ஒன்றாக நடித்தனர். இந்த தம்பதியினருக்கு அரியானா என்ற பெண் குழந்தை உள்ளது. பகத் பாசில் மற்றும் நஸ்ரியா இருவரும் பெங்களூர் டேஸ் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
அதுவும் அந்த படத்தில் கணவன் மனைவியாக நடித்த நிலையில் நிஜத்திலும் அது கைகூடியது. 2014 இல் இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் அப்போது பகத் பாஸிலுக்கு 32 வயது மற்றும் நஸ்ரியாவுக்கு 19 வயது தான். கிட்டத்தட்ட 13 வயது வித்தியாசம் இவர்கள் இருவருக்கும் இருந்தது.