Dhanush: சிம்பு மீது கொண்ட பகை உணர்வால் வெற்றிமாறனுக்கு காப்புரிமை கொடுக்க மறுக்கிறார் தனுஷ் என 24 மணி நேரத்தில் சமூக வலைத்தளம் முழுக்க ஒரு செய்தி பரவியது. அடுத்த நாள் காலையிலேயே இது முற்றிலும் தவறு என வெற்றிமாறன் பேட்டி கொடுத்தார்.
அட என்னதான் நடக்குது என்று தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதாவது தனுஷுக்கு எதிராக இணைய கூலிப்படை வேலை செய்வதாக அந்த பிரபலம் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவில் எந்த ஒரு போட்டியும் இல்லாமல் தனக்கான பாதையை தானே செதுக்கி உலக அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறார் தனுஷ்.
இணைய கூலிப்படை
இவரை ஹீரோவிலிருந்து ஜீரோ ஆக்க வேண்டும். நடிப்பில் அவரிடம் போட்டி போட்டு ஒன்னும் பண்ண முடியாது. இவர் ஒரு நடிப்பு அரக்கன் என்பது எல்லோருக்குமே தெரியும்.
இதனால் இந்த இணைய கூலிப்படை கையில் எடுத்திருக்கும் முயற்சி தான், தனுஷ் நீங்க நினைப்பது போன்ற நல்லவர் கிடையாது. நிறைய பிரபலங்களின் விவாகரத்திற்கு இவர் தான் காரணம். மேலும் மேடை ஏறி வாழு வாழ விடு என சும்மா கதை விட்டுக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு நெருக்கமானவர்கள் வளர்ந்து வந்தால் சுத்தமாக பிடிக்காது. இப்படி போன்ற பரப்புரைகள் கடந்த சில மாதங்களாக இணையதளத்தை ஆட்கொண்டு இருக்கின்றன.

இந்திய சினிமா ரசிகர்களை பொறுத்தமட்டிலும் ஒருவரின் சொந்த வாழ்க்கை தான் அவர் தொழிலில் வெற்றி பெறுவதற்கும் தோல்வி அடைவதற்கும் காரணமாக அமைகிறது. பல குடும்பங்களை கெடுக்கிறார் தனுஷ் என்று சொன்னால் அவர் அசுரனை விட அழுத்தமான படம் எடுத்தாலும் தோல்வியை தழுவி தான் உட்கார வேண்டும்.
இதை சரியாக புரிந்து கொண்டு தான் அவரை தவறான மனிதனாக சித்தரிப்பதாக வலைப்பேச்சு சேனல் பிஸ்மி பேட்டி கொடுத்திருக்கிறார். மேலும் இதற்கு பின்னால் இந்த இணைய கூலிப்படைகளை ஏவி விடுவதில் அவருடைய முன்னாள் நண்பர்கள், இந்நாள் பகையாளிகள் சிவகார்த்திகேயன், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருப்பதாகவும் அவர் பேசியிருக்கிறார்.