Dhanush: நண்பர்கள் பகைவர்கள் ஆகும்போது கூட கண்ணியத்தை காப்பாற்றினால் மட்டுமே அது சிறந்த நட்பாக இருந்திருக்க முடியும். இந்த விஷயத்தில் நேர்மை நேர்மை என அறைகூவல் போட்டுக் கொண்டிருந்த நயன்தாரா தவறி இருக்கிறார்.
சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் மீண்டும் தனுஷை இணையத்தில் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட தருணத்தில் தான் இன்று யூடியூப் பிரபலம் ஒருவர் தனுஷ் பற்றி பேட்டி கொடுத்திருக்கிறார்.
அதில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் நயன்தாரா நடந்து கொண்ட விதத்தைப் பற்றி பேசி இருக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்திற்கு தனுஷ் முன்னதாகவே வந்து விட்டார். அவருக்குப் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய மனைவி வந்திருந்தார்கள்.
தனுஷ் எப்படி பொறுத்துகிட்டாரு!
தனுஷ் இடது பக்கத்தில் முதல் வரிசையிலும், சிவகார்த்திகேயன் குடும்பம் வலது பக்கத்தில் முதல் வரிசையிலும் அமர்ந்திருந்தார்கள். அதன் பிறகு தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வந்திருக்கிறார்கள்.
நயன்தாரா அங்கிருந்த PR-களிடம் நான் தனுஷ் பக்கத்தில் தான் அமர வேண்டும், சிவகார்த்திகேயனை அந்த இடத்தில் இருந்து காலி பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கிறார். சிவகார்த்திகேயனை எப்படி இடம் மாற்றி அமர செய்வது என PR-களுக்கு ரொம்பவும் தர்ம சங்கடமாக இருந்திருக்கிறது.
உடனே நயன்தாராவே அவரை கிப்ட் கொடுப்பதற்கு மேடை மீது அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லி இருக்கிறார். சிவகார்த்திகேயன் மேடைக்கு செல்லும் நேரத்தில் தனுஷ் அமர்ந்திருக்கும் அதே வரிசையில் வந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து, அவருக்கு நேராகவே காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்து இருந்தாராம்.
ஒரு காலத்தில் நண்பராக இருந்தவரை இந்த அளவுக்கு இழிவுபடுத்த வேண்டும் என்று நயன்தாரா நினைக்கிறார் என வலைப்பேச்சு பிஸ்மி சொல்லி இருக்கிறார். போதாத குறைக்கு அன்றுதான் தனுஷ் தன்னுடைய விவாகரத்து வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கும் சென்று வந்திருக்கிறார்.
தன்னால் உயர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் இந்த அளவுக்கு நடந்து கொள்ளும்போது அதை எப்படி பொறுத்துக் கொள்கிறார் தனுஷ் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.