Indraja Robo Shankar: வாயுள்ள பிள்ளை பொழச்சிக்கும் என்று சொல்வார்கள். அது பிகில் பாண்டியம்மாவுக்கு தான் சரியாக பொருந்தி இருக்கிறது. சினிமாவில் 100 படம் நடித்து குடும்பத்தை கடை சேர்க்க முடியாமல் தவிக்கும் நடிகர், நடிகைகளை பார்த்திருக்கிறோம்.
ஆனால் அம்மணி பிகில் என்ற ஒரு படத்தில் நடித்துவிட்டு ஒட்டு மொத்த குடும்பத்தையும் செட்டில் பண்ணி விட்டார். டிக் டாக் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்திரஜா ரோபோ சங்கருக்கு பிகில் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.
இன்ஸ்டாகிராமில் ஜகஜால வேலை
இதை தொடர்ந்து இந்திரஜா இன்ஸ்டாகிராம் மற்றும் டிவி சேனல்களில் அதிக வாய்ப்புகளை பெற்றார். அதே நேரத்தில் அவருடைய அம்மா பிரியங்கா ரோபோ ஷங்கர் இந்திராஜா உடன் அதிக பேட்டிகளில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கும் வலைத்தொடர்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.
இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோவர்கள் வந்ததும் இந்திரஜாவை தேடி விளம்பரங்களும் வரத் தொடங்கின. இதைத்தொடர்ந்து கார்த்திக் என்பவரை காதலித்து கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்ததும் திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான கையோடு உங்கள் பாண்டியம்மா என்ற youtube சேனலையும் ஆரம்பித்தார். நிச்சயதார்த்தம், கல்யாணம், மருவீடு, மொய் விருந்து, கர்ப்ப பரிசோதனை, மருத்துவ அறிக்கை, வளைகாப்பு, பிரசவம், பிரசவாரையிலிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது, அப்பா குழந்தையை தூக்கி வச்சிருக்காரு, அம்மா குழந்தையை தூக்கி வச்சிருக்காங்க என்று வீட்டில் நடக்கும் அத்தனையையும் இன்ஸ்டாகிராமுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார்.
இதனால் விளம்பரங்கள் மூலம் இந்திரஜாவுக்கு வருமானமும் அதிகமாகிவிட்டது. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்ற கதையாக ஆறு மாச குழந்தைக்கு அறிவு வளர்க்க போறேன் என கொடுத்த விளம்பரத்தால் தான் அம்மணி வசமாக சிக்கிக் கொண்டார்.
கைது வரை பேசப்படுவதால் இப்போதைக்கு சைலன்ட் மோடில் இருக்கிறார். அம்மாவை வலைத்தொடர்கள் பக்கம் பிசியாக்கிவிட்டார், இவர் இன்ஸ்டாகிராம் மூலம், இன்னொரு பக்கம் மாமியாருக்கு சமையல் வீடியோக்கள் என துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இதில் கஷ்ட காலம் என்னவென்றால் ஆரம்ப கட்டத்தில் இருந்தே ரோபோ ஷங்கருக்கு என்று இருந்த ரசிகர்கள் தான் என்ன இதெல்லாம் என்பது போல் வெறுத்துப் போய்விட்டார்கள்.