Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி அவளுடைய சொந்த ஊருக்கு போன பின்னால் சென்னையில் இருக்கும் அன்பு அல்லது மகேஷுக்கு எல்லாம் உண்மையும் தெரியவரும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இவர்கள் இருவரையும் தாண்டி தற்போது வார்டனுக்கு உண்மை புலப்பட இருக்கிறது. ஆடு தானாக தேடி வந்து கசாப்பு கடையில் நிற்பது போல் மித்ரா வார்டனை தேடி வருகிறாள்.
உளறி கொட்டும் மித்ரா
மகேஷுக்கும் தனக்கும் கல்யாணம் நடக்க இருப்பதாகவும், அன்பு மற்றும் ஆனந்தி திருமணம் செய்து கொண்டால் தான் இது நடக்கும் என்றும் சொல்கிறாள். மித்ரா மகேஷனை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டு இருப்பதில் இருந்தே வார்டன் அடுத்த கட்டத்தை துப்பு துலக்க இருக்கிறார்.
அதே நேரத்தில் சொந்த ஊரில் இருக்கும் ஆனந்தியுடன் சௌந்தர்யா மற்றும் ரெஜினா இருக்கிறார்கள். சவுந்தர்யா அன்புக்கு போன் பண்ணி பேசிவிட்டு வலுக்கட்டாயமாக ஆனந்தியிடம் ஃபோனை கொடுக்கிறாள். ஆனந்தியும் மறுக்க முடியாமல் போனை வாங்கி பேசுவது போல் காட்டப்படுகிறது.
ஆனந்தி அன்புவின் குரலை கேட்க மாட்டிலும் அவள் மனம் மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. வார்டன் மூலம் ஆனந்தியின் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் மித்ரா தான் என்பது தெரிகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.