ஆஹா கல்யாணம் சீரியலில் சித்ரா சூர்யா குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதும், அனைவரும் கோடீஸ்வரி வீட்டில் தங்கியிருக்கிறார்கள். மஹாவும் சூர்யாவும் வேலை தேடி அலையுறாங்க. மகாவுக்கு ஒரு பக்கமும் வேலை கிடைக்கல. சூர்யா நண்பன் சூர்யாவுக்கு வேலை தருகிறேன் என்று ஏமாற்றி விடுகிறான்.
இதற்கிடையில் ஐஸ்வர்யாவை வீட்டில் காணோம் என்று எல்லாரும் தேடுறாங்க. அந்த சமயம் கௌதம் ஐஸ்வர்யாவிடம் டைவர்ஸ் கேட்கிறான். அதற்கு ஐஸ்வர்யா 50 லட்சம் தந்தால் டைவர்ஸ் தருகிறேன் என்கிறாள். ஆனால் கவுதம் 50,000 ரூபாயை அனுப்பிவிடுகிறான். உடனே ஐஸ்வர்யா டிவோர்ஸ் விஷயமாக சித்ரா விட்டுக்கு சென்று இருக்கிறாள். ஐஸ்வர்யாவை பார்த்து டேய் இவ எதுக்குடா இங்க வந்தா? என்னதான் அவளை பழி வாங்கணும்னு நினைச்சாலும் அவ வருகிறத பாக்கும்போது எனக்கு என்னவோ ஈரோக்கல எல்லாம் நடுங்குது என்று சித்ரா கௌதம் கிட்ட சொல்கிறாள்.
பரவாயில்லையே என்ன பாத்ததும் ரெண்டு பேரும் எந்துருச்சு நின்னு மரியாதை எல்லாம் கொடுக்காதீங்க. சரி சரி மரியாதை மனசுல இருந்தா போதும் உட்காருங்க. என்ன பாத்ததும் மூஞ்ச எல்லாம் அப்படியே பேய் அறைஞ்ச மாதிரி ஆயிடுச்சு என்று ஐஸ்வர்யா சொல்கிறாள். அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல நீ முதல்ல என்ன விஷயமா வந்தேன்னு சொல்லு என கவுதம் கேட்கிறான்.
நீ கேட்கிற மாதிரி பெரிய அமௌன்ட் லாம் இப்ப கொடுக்க முடியாது. நீ பணத்தை வாங்கிட்டு என்ன ஏமாத்தி விடுவாய் என்று சொல்றான் கவுதம். அதற்கு ஐஸ்வர்யா கவுதம் கிட்ட உன்ன பத்தி கூடத்தான் எனக்கு நல்லா தெரியும் நான் கையெழுத்து போட்டதுக்கு அப்புறம் நீ பணம் கொடுப்பேன்னு என்ன நம்ப சொல்றியா? என்று ஐஸ்வர்யா கேட்கிறாள். அதன் பிறகு வேலை தேடி வீட்டுக்கு வந்த மஹாவும் சூர்யாவும் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் சமயத்தில் மகா அப்பாகிட்ட பொம்மை செய்ய ரூபாய் 25,000 பேசிய customer 15,000 ரூபாவை மஹாவின் அப்பாவிடம் கொடுக்கிறார்.
சூர்யா மாமனார் தொழிலில் புதிய மாற்றம்
இதை பார்த்த சூர்யா நம்ம ஏன் இந்த பிசினஸ் செய்ய கூடாது என மஹாவிடம் கேக்கிறான். அதற்கு மகா அப்பா உங்களுக்கு இது வேண்டாம் மாப்பிள வேற ஏதாவது நல்ல தொழில் பாருங்க உழைக்கிறவங்கள விட இடையில உள்ள புரோக்கர்ஸ் தான் நல்ல லாபத்தை பாக்குறாங்க. கஷ்டப்பட்டு உழைக்கிற நமக்கு அவங்களா பார்த்து கொடுக்குறதுதான் மாப்பிள்ளை பணம். உழைக்கிறவங்களுக்கு வெறும் வேறுதான் மாப்பிள்ளை மிச்சம் என மகா அப்பா சூர்யாவிடம் கூறினார். மாமா கஷ்டம்ங்கறது எல்லா தொழில்லையும் இருக்கு. இந்த தொழில்ல எல்லாமே பழசா இருக்கு. அதனாலதான் இந்த பிரச்சனை. நான் ஏதாவது புதுசா பண்ண முடியுமான்னு யோசிக்கிறேன் என்று தன்னுடைய மாமனார் தொழிலை செய்ய முடிவெடுக்கிறான் சூர்யா.