சினிமா : பொதுவாக தற்போதுள்ள தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் இணைந்து நடிக்கிறார்கள். இசையமைப்பாளர்கள் தான் இசையாய்க்கும் படங்களில் நடனமாடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் தான் தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். இது அனைத்தும் தற்போதுள்ள ட்ரெண்டிங் தமிழ் சினிமா.
இதற்கு சில வருடங்களுக்கு முன் இயக்குனர்கள் தான் இயக்கும் படங்களில் ஒருசில காட்சிகளில் வந்து செல்வார்கள். இது போல பல திறமைகளை கொண்ட இயக்குனர்களையும் நம்மால் அன்றைக்கே காணமுடிந்தது. பல இயக்குனர்கள் தன்னை நகைச்சுவை நடிகர்களாக திரைமுன் கொண்டுவந்தவர்களும் இருக்கிறார்கள். அந்த பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.
இயக்குனர்களாக வெற்றி கண்ட 7 பிரபலங்கள்..
மணிவண்ணன் : நடிகர், இயக்குனர், கதையாசிரியர், வசன எழுத்தாளர் என இவர் பெருமையை கூறிகொண்டே போகலாம். இவர் தமிழ் திரையுலகிற்கு பல பெருமைகளை, நிறைய படைப்புக்களை தந்த மாமனிதர். இவர் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எதார்த்தமான நகைச்சுவைக்கு பேர்போனவர்.50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துமுள்ளார்.அமைதிப்படை, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமானவர்.
மனோபாலா : இயக்குனரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா அவர்கள் தமிழ் திரையுலகில் நீங்காத இடத்தை பெற்றுள்ளார். என் புருஷன் எனக்கு மட்டும்தான், ஊர்க்காவலன் போன்ற 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். நிறைய படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து பிரபலமானவர். நண்பன், காஞ்சனா போன்ற படங்களில் காமெடி ரோலில் கலக்கியிருப்பார் மனோபாலா.
தம்பி ராமையா : தம்பி ராமையா அவர்கள் பிரபலமான காமெடி நடிகராகத்தான் அனைவர்க்கும் தெரியும். அனால் அவர் ஒரு நல்ல இயக்குனரும் கூட . இவர் இந்திரலோகத்தில் நான் அழகப்பன், மனுநீதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். 50கும் மேற்பட்ட படங்களில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை அணுகுமுறை அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.
டி.பி. கஜேந்திரன் : மிடில் க்ளாஸ் மாதவன், சீனா தானா 001, பந்த பரமசிவம் போன்ற 20கும் மேற்பட்ட படங்களை இயற்றியுள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்துள்ளார். இவர் காமெடி ரோலில் வேலாயுதம், சீனா தானா 001 ஆகிய நிறைய படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துமுள்ளார்.
ரமேஷ் கண்ணா : ரமேஷ் கண்ணா அவர்களை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. இவர் சில படங்களை இயக்கியுள்ளார். தொடரும், பிரண்ட்ஸ் போன்று நிறைய படங்களில் நகைச்சுவை நடிகராக மக்கள் மனதில் நின்றவர். கதை, வசனம், உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தவர். இயக்குனராக இருந்து காமெடி ரோலில் கலக்கியவர் ரமேஷ் கண்ணா அவர்கள்.
சிங்கம் புலி : இவர் மகளை திருடாதே, சிங்கம் புலி போன்ற நிறைய திரைப்படங்களை இயக்கியுள்ளார். மற்றும் நிறைய படங்களில் குணசித்ர மற்றும் காமெடி ரோலிலும் நடித்தவர். இவரும் பன்முக திறமை கொண்ட நடிகர்.
ஆர் ஜே பாலாஜி : இவர் பிரபலம வானொலி ஒளிபரப்பாளர். இவர் நடித்த படங்கள் அனைத்துமே மக்களை மிகவும் கறந்த பாடலாக இருக்கின்றன. மற்றும் இவர் நல்ல நகைச்சுவை நடிகராகவும் திகழ்கிறார். இவருட மூக்குத்தி அம்மன், LKG, இவர் இயக்கி திரைக்கு வரவிற்கும் “கருப்பு” ஆகிய படங்கள் வாயிலாக நாம் இவரது திறமையை பார்த்துக்கொண்டிருகிறோம். இந்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் நடித்துள்ளார்.