Netflix: நெட்ப்ளிக்ஸ் OTT நிறுவனம் விரைவில் ஒரு பிரம்மாண்டமான வலைத்தொடரை தயாரிக்க இருக்கிறது. முழுக்க முழுக்க சென்னையில் உருவாகப் போகும் இந்த தொடரின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.
பான் இந்தியா நடிகராக மாறி இருக்கும் மாதவன் இந்த வலைத்தொடரில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஏற்கனவே மாதவன் இந்த நிறுவனத்திற்கு நிறைய வலைத்தொடர்களை நடித்துக் கொடுத்திருக்கிறார்.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு
சில காலங்கள் இடைவெளி விட்டிருந்த மாதவனுக்கு இது மிகப்பெரிய கம் பேக் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் மாதவன் நடிப்பதால் கண்டிப்பாக இந்த பான் இந்தியா தொடராகவும் ரிலீஸ் ஆக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த தொடரில் மாதவனுடன் இணைந்து ரப்பர் பந்து படத்தில் ஹரிஷ் கல்யாணிக்கு ஜோடியாக நடித்த நடிகை மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்கள்.
மேலும் இயக்குனர் சாருகேஷ் இந்த தொடரை இயக்குகிறார். இந்த தொடர் அரசியல் கதை களத்துடன் அமைந்திருப்பதாகவும் இதற்காக பெரிய அளவில் சென்னை மாநில கல்லூரியில் செட் போட்டிருப்பதாகவும் தெரிகிறது. விரைவில் இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும்.