Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தது சிங்க பெண்ணே. தற்போது சீரியலின் மாறுபட்ட கதை அமைப்பால் ரசிகர்களிடையே ஒரு பெரிய சலிப்பு ஏற்பட்டு இருப்பது நிதர்சனமான உண்மை.
இருந்தாலும் இந்த சீரியலில் இருக்கும் கேரக்டர்கள் சின்னத்திரை ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றவை. அந்த கேரக்டர்களின் நடித்துக் கொண்டிருக்கும் ஆர்டிஸ்ட்களின் சம்பளத்தை தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.
சிங்கப்பெண்ணே சீரியல் ஆர்டிஸ்டுகள்
இப்போது ரசிகர்களின் அதிக அளவு கோபத்தை சம்பாதித்து கொண்டிருந்தாலும் சில மாதங்களுக்கு முன்பு வரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டது ஆனந்தி கேரக்டர் தான்.
இந்த கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் மனிஷா மகேஷ் ஏற்கனவே பேசும் பைங்கிளி என்ற கன்னட சீரியலில் பிரபலமானவர்.
சிங்க பெண்ணே சீரியலில் நடிக்கும் இவருக்கு ஒரு எபிசோடுக்கு 12000 சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
ஆனந்தியின் தோழி ஜெயந்தி கேரக்டரில் நடிக்கும் தாரணி ஒரு எபிசோடுக்கு ஐந்தாயிரம் சம்பளமாக பெறுகிறார். அன்புவின் தங்கை யாழினி கேரக்டரில் நடிக்கும் திவ்யா விஜயகுமாரும் ஒரு எபிசோடுக்கு ஐந்தாயிரம் சம்பளமாக வாங்குகிறார்.
சிங்க பெண்ணே சீரியலில் வில்லியாக மிரட்டி கொண்டிருக்கும் மித்ரா கேரக்டரில் நடிக்கும் பவித்ரா ஒரு எபிசோடுக்கு 8000 சம்பளமாக வாங்குகிறார். ஆனந்தியின் தோழி காயத்ரி கேரக்டரில் நடிக்கும் யோக லட்சுமி ஒரு எபிசோடுக்கு 8000 சம்பளமாக பெறுகிறார்.
சிங்க பெண்ணே சீரியலில் முக்கிய கேரக்டர் மகேஷ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷன் கவுடா ஒரு எபிசோடுக்கு 12 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறார்.
சிங்க பெண்ணே சீரியலை இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருப்பதற்கு காரணமே அன்பு கேரக்டரில் வரும் அமலஜித் தான். இவர் ஒரு எபிசோடுக்கு 15000 சம்பளமாக பெறுகிறார்.