சின்ன மருமகள் சீரியலில் கருப்பு சேதுவிடம், மாப்பிள்ளை தமிழ் செல்வி டாக்டர் கனவை நிறைவேற்றுவதற்கு அவளுக்கு நீ ஹெல்ப் பண்ணியது வீணா போகலை நீங்க ரெண்டு பேரும் நினைத்த மாதிரி அவளுக்கு மதுரை மெடிக்கல் காலேஜ்ல சீட்டு கிடைச்சிருக்கு என்று சொல்கிறான்.
சேது உடனே ஆமா அவள் படிக்க போகிற லட்சணம் எல்லாம் எனக்கு தெரியும் என்று சாவித்திரி அனுப்பிய வீடியோவை காட்டிட்டு கோபமாக செல்கிறான்.
தமிழ்செல்வி காலேஜிலிருந்து வந்ததும் கருப்பு அவளிடம் ஏம்மா தமிழ் நீ சக்தியிடம் சிரிச்சு சிரிச்சு பேசுறத யாரோ வீடியோ எடுத்து சேதுவிற்கு அனுப்பியிருப்பான் போல அதை பார்த்து சேது கோபப்படுகிறான் என்று சொல்கிறான்.
உடனே தமிழ் அண்ணன் யாரும் என்னை தப்பா நினைக்கிறது பத்தி எனக்கு கவலை இல்லை. என் மனசுல எந்த கள்ள கபடமும் கிடையாது. என்னுடைய லட்சியம் நான் டாக்டர் ஆவது மட்டும்தான் என்று சொல்கிறாள்.
ராஜாங்கம் மீது லஞ்ச குற்றச்சாட்டு
இதற்கிடையில் தமிழ் செல்வி அப்பா செல்ல துரை அமைச்சர் ராஜாங்கம் பேரை சொல்லி எல்லோரிடமும் பணம் வாங்கியதை ஹோட்டல் மேனேஜர் மூலம் அறிந்த போஸ் ராஜாங்கம் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குகிறார் என்று போலீசிடம் கம்ப்ளைன்ட் கொடுக்க முடிவெடுக்கிறான்.
போஸ் அவன் அம்மாவிடம் எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் ஊருக்கு வர போகிறேன் என்று சொல்ல அவன் அம்மாவோ டேய் போஸ் ஏற்கனவே தமிழ்செல்வி உன்னை போலீசில் பிடித்து கொடுக்கணும்ணு வெறியோடு இருக்கிறாள், நீ இந்தப் பக்கம் வராதே என்கிறாள்.
ஆனாலும் ஊருக்கு வந்த போஸ் செல்லபாண்டி யாரிடலாம் பணம் வாங்கினானோ அவர்களிடம் நான் உங்களுக்கு 5 லட்சம் பணம் தருகிறேன் எல்லோரும் ராஜாங்கம்தான் பணம் வாங்கினார் என்று போலீசிடம் கம்ப்ளைன்ட் கொடுக்க சொல்கிறான்.
ராஜாங்கம் ஜெயிலுக்கு செல்வாரா இல்லையா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.