Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனின் தொந்தரவிலிருந்து ஒரேடியாக விடுதலை வேண்டும் என்றால் நமக்கு வேற வேலை வேண்டும் என செந்தில் அவ்வப்போது ஆசையுடன் இருந்தார். ஆனால் அதற்கான நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்காததால் தொடர்ந்து பாண்டியன் கூட கடைக்கு போய் தினம் தினம் அவமானத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்து வந்தார்.
இதையெல்லாம் சரி செய்யும் விதமாக மீனாவின் அப்பாவிடம் செந்தில் விட்ட சவால் என்னவென்றால் உங்களுக்கு ஏற்ற மாதிரி நானும் அரசாங்க உத்தியோகத்தை வாங்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டார். அதன்படி அரசாங்க உத்தியோகத்தில் சேர்வதற்கு எக்ஸாம் பாஸ் பண்ண வேண்டும் என்பதால் படிக்க ஆரம்பித்தார். உடனே எக்ஸாமும் எழுதி பாஸ் ஆகிடலாம் என்று நினைத்தார்.
ஆனால் செந்தில் எக்ஸாமில் பாஸ் பண்ண முடியாமல் போய்விட்டது. இதனால் துவண்டு போன செந்தில் நமக்கு எப்போதும் இந்த மளிகை கடை தான் என்று நினைக்க ஆரம்பித்து விட்டார். இந்த சூழ்நிலையில் மீனாவின் அப்பாவுடன் சமரசம் ஆன பிறகு அரசாங்க உத்தியோகத்தில் சேர்வதற்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது 10 லட்சம் ரூபாய் பணம் கட்டினால் வேலை நிச்சயம் உண்டு என்று செந்திலுக்கு ஆசை வார்த்தை காட்டினார்.
உடனே செந்திலும் பாண்டியன் கொடுத்த பணத்தை மாமனாரிடம் கொடுத்து வேலைக்கு ஏற்பாடு பண்ண சொன்னார். ஆனால் அந்த பணம் திரும்பவும் பாண்டியன் கேட்டதால் செந்தில் என்ன பண்ணுவது என்று தெரியாமல் யோசித்த நிலையில் மீனா லோன் வாங்கி அந்த பத்து லட்ச ரூபாய் பணத்தை பாண்டியனிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். இப்படி எல்லா கஷ்டத்தையும் அனுபவித்த செந்திலுக்கு விமோசனம் கிடைக்கும் விதமாக மாமனார் மூலம் பொதுப்பணித்துறையில் வேலை கிடைத்து விட்டது.
அந்த வகையில் மீனாவின் அப்பா போன் பண்ணி செந்தில் மற்றும் மீனாவை வரச்சொல்லி அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் கையில் வாங்கிக் கொண்டார்கள். இது கனவா நினைவா என்ற சந்தேகத்தில் செந்தில் வானத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டார். இருந்தாலும் இந்த விஷயத்தை வீட்டில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டும் என்று கதிருக்கு போன் பண்ணி அண்ணன் மாமா என அனைவரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று செந்தில் சொல்கிறார்.
அதன்படி வீட்டுக்கு போனதும் செந்தில் வேலை கிடைத்த விஷயத்தை பாண்டியன் மற்றும் அனைவருக்கும் சொல்லப் போகிறார். இது மற்றவர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும் பாண்டியனுக்கு மிகப்பெரிய ஆப்பாகத்தான் இருக்கப் போகிறது. கொஞ்சம் கூட மதிப்பும் மரியாதையும் கொடுக்காமல் மனசாட்சி இல்லாமல் நடந்து கொண்ட பாண்டியனுக்கு இனிமேல் தான் செந்திலின் அருமை புரிய போகிறது. ஆனாலும் செந்தில், மாமனாரிடம் சவால் விட்டு கடைசியில் மாமனார் காலில் விழுந்து தஞ்சம் அடைந்து ஒரு வேலையும் வாங்கிக் கொண்டார்.