விஜய்யுடன் நேருக்கு நேராக 7 படங்களில் மோதிய கமல்.. அதிக வெற்றி யாருக்கு? – Cinemapettai

Tamil Cinema News

தமிழ் சினிமாவின் தலைமை தாங்கும் இரண்டு வெவ்வேறு தலைமுறை சூப்பர் ஸ்டார்கள்! ஒருவர் ரசிகர்களின் “மாஸ் ஹீரோ”, மற்றவர் “நடிப்பின் எம்ரான்“. விஜய் தனது அதிக Box Office ஹிட்ஸ் மூலம் இளைஞர்களின் ஹீரோவாக மாறினார், கமல் ஆழமான கதைகள், பலமுறை தேசிய விருதுகள், நடிகனாக முத்திரை பதித்தவர். இவர்கள் இருவரும் Blockbuster படங்களை கொடுத்து ரசிகர்களை வசீகரித்திருப்பவர்கள்.

1992 – நாளைய தீர்ப்பு – சிங்காரவேலன்

விஜய் ஹீரோவாக அறிமுகமான ‘நாளைய தீர்ப்பு’ படம் வெளியானது. தந்தையின் மரணத்திற்கு நீதி தேடும் இளைஞனின் கதையாக இருந்தும், புதிய முகம் என்பதால், படம் வெற்றி பெறவில்லை.

அதே ஆண்டில் கமல் நடித்த ‘சிங்காரவேலன்’ நகைச்சுவை குடும்ப படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் ஆனது. அதே ஆண்டில் கமலின் ‘தேவர் மகன்’ திரைப்படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. ஆகவே 1992ம் ஆண்டில் கமல் தான் தெளிவான வெற்றியாளர்.

1993 – செந்தூரப்பாண்டி – மகராசன்

விஜய் நடித்த ‘செந்தூரப்பாண்டி’ கிராமத்து நாயகன் தனது குடும்பத்திற்காக போராடும் ஆக்ஷன் படம். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விஜய்க்கு வெற்றியை தந்தது. அதே ஆண்டில் கமலின் ‘மகராசன்’ மற்றும் ‘கலைஞன்’ எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. எனவே 1993ல் வெற்றிக்கொடி பதக்கத்தில் விஜய்தான் முன்னிலை பெற்றார்.

1994 – ரசிகன் – மகாநதி

விஜய் நடித்த ‘ரசிகன்’ ஒரு இளைஞன் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் எமோஷனல் ஆக்சன் படம், இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று ஹிட் ஆனது. அதே ஆண்டில் கமலின் ‘மகாநதி’ படத்தில், தனது மகளை காப்பாற்றும் அப்பாவின் வேதனைக்கு மையமாக சமூக உணர்வுடன் ஆன நடிப்பு பாராட்டப்பட்டது; படம் சூப்பர் ஹிட் ஆகி தேசிய விருதும் பெற்றது. எனவே, வெற்றி படங்களும் விருதுகளும் பெற்ற கமல்தான் அந்த ஆண்டு முன்னிலை பெற்றார்.

1996 – பூவே உனக்காக – இந்தியன்

விஜய்யின் ‘பூவே உனக்காக’ பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி அவரது கேரியருக்கு திருப்புமுனையாக இருந்தது. கமலின் ‘இந்தியன்’ சமூக ஊழலை எதிர்க்கும் வீரப்பாயின் கதையாக மெகா ஹிட் ஆனது, ‘அவ்வை சண்முகி’ நகைச்சுவையுடன் குடும்பத்தை காப்பாற்றும் கதை சூப்பர் ஹிட் ஆனது. எனவே, இருவருக்கும் இரண்டு வெற்றிப் படங்கள் 1996 ல் சமமான வெற்றி கிடைத்தது.

2000 – குஷி – தெனாலி

விஜய்யின் குஷி, பிரியமானவளே சூப்பர் ஹிட் ஆக, கண்ணுக்குள் நிலவு மட்டும் தோல்வியடைந்தது. கமலின் ஹேராம் ஃபிளாப் ஆனால், தெனாலி பிளாக்பஸ்டர் ஹிட் ஆச்சு. எனவே அந்த வருடம் வெற்றியில் விஜய் தான் மேலிடத்தில் இருந்தார்.

2009 – வில்லு – உன்னை போல் ஒருவன்

விஜய்யின் வில்லு பிளாப் ஆனது, வேட்டைக்காரன் சராசரியாக ஓடியது. கமலின் உன்னை போல ஒருவன் படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இந்த ஆண்டில் கமல்தான் வெற்றியாளர்.

2024 – கோட் – இந்தியன் 2

விஜய்யின் கோட் படம் பெரிய ஹிட் அடிச்சது. அதே வருடம் கமலின் இந்தியன் 2 எதிர்பார்ப்பை விட பிளாப் ஆனது. அதனாலா, இந்த வருடம் விஜய்தான் வெற்றியாளர்.

2025 இல் விஜய் ஜனநாயகன் படத்திலும் கமல் இந்தியன் 3 படத்திலும் கலக்க வர்றாங்க. யாரு mass பண்றாங்கன்னு பாக்கலாம்!

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.