Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா எப்படிப்பட்ட வீட்டில் வாழ்கிறார் என்பதை பார்ப்பதற்காக நிலாவின் அண்ணி மதி என்பவர் நிலாவுக்கு போன் பண்ணி சென்னைக்கு ஒரு வேலையாக வந்தேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டு போகலாம் என்று இருக்கேன். அதனால் நீ இருக்கும் வீட்டின் லொகேஷன் அனுப்பி விடு. நான் அங்கே வந்து விடுகிறேன் என்று சொல்கிறார்.
உடனே பதட்டமான நிலா, உங்களுக்கு சிரமம் வேண்டாம் நீங்கள் இருக்கும் இடத்திற்கு நான் வருகிறேன் என்று சொல்கிறார். ஆனால் நிலாவின் அண்ணி, எனக்கு ஒரு வேலையும் இல்லை சும்மாதான் இருக்கிறேன் அதனால் நானே உன் வீட்டுக்கு வருகிறேன். நீ இருக்கும் வீட்டை நானும் பார்த்த மாதிரி இருக்கும். அதனால் லொகேஷன் மட்டும் அனுப்பி வை என்று சொல்கிறார்.
இதனால் வேற வழி இல்லாமல் நிலாவும் அண்ணிக்கு லொகேஷன் அனுப்பி வைத்து விடுகிறார். பிறகு பல்லவனும் நிலாவும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்து வைக்கிறார்கள். பிறகு நிலாவின் அண்ணி வந்ததால் பல்லவன், சேரன் சோழன் பாண்டியனுக்கு போன் பண்ணி தகவலை சொல்கிறார். உடனே சோழன் வீட்டுக்கு வந்து விடுகிறார். கூல்டிரிங்ஸ் ஸ்நாக்ஸ் என அனைத்தையும் வாங்கிட்டு வருகிறார்.
ஆனால் நிலாவின் அண்ணி எதையும் சாப்பிடாமல் வீட்டையே பார்த்து, இந்த மாதிரி ஒரு பாழஅடைந்த வீட்டிலையா நிலா தங்கி இருக்கிறார் என்று மனதிற்குள்ளே சொல்லிக் கொள்கிறார். பிறகு பாத்ரூமில் சரியில்லை என்று நிலாவின் அன்னிக்கு வருத்தம் ஆகிவிட்டது. நிலா உடன் பீல் பண்ணி பேசி நீ இங்கே இருந்தது போதும், எனக்கு நெருங்கிய தோழி ஒருவர் இருக்கிறார்.
அவளுடன் அவள் வீட்டில் போய் தங்கிக் கொள் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் சேரனும் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். ஆனால் அது எதையும் சாப்பிடாமல் வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறார். போகும் பொழுது சோழனை தனியாக கூப்பிட்டு நிலா எப்படிப்பட்ட வீட்டில் இருந்தால் என்று மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு நன்றாகவே தெரியும், உங்க கல்யாணமும் எப்படி நடந்தது என்று எனக்கு தெரியும்.
அதனால் நிலா இந்த மாதிரி ஒரு வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கொஞ்சம் கோபமாக பேசுகிறார். நிலாவிடம் சீக்கிரமா இங்கிருந்து கிளம்புற வழிய பாரு என்று சொல்லி வீட்டிற்கு போய் விடுகிறார். நிலவின் அண்ணி வந்துட்டு போனதையும், நிலாவே இங்கிருந்து கிளம்ப சொன்னதையும் நினைத்து அண்ணன் தம்பிகள் நான்கு பேரும் பீல் பண்ணுகிறார்கள்.
சோழன் எப்படியாவது நிலா என்னுடன் இந்த வீட்டிலே இருக்க வேண்டும். அதற்கு என்ன பண்ணலாம் என்று யோசிக்கும் பொழுது வீட்டை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றலாம். ஆனால் முதலில் புதுசாக பாத்ரூம் கட்டலாம் என்று ஐடியாவை சோழன் சொல்கிறார். உடனே நான்கு பேரும் சேர்ந்து கட்டலாம் என்று முடிவு பண்ணிய நிலையில் சேரன் ஒரு லட்ச ரூபாய் வேணும் என்று சொல்கிறார்.
அவ்ளோ பணம் ஆகுமா என்று சோழன் யோசித்த நிலையில் பல்லவன் பாக்கெட் மணிக்கு கொடுத்த பணத்தை சேர்த்து வைத்தேன் என்று பல்லவனிடமிருந்த பணத்தை வந்து கொடுத்து உதவி செய்கிறார். இதை பார்த்ததும் சோழன் அண்ணனை விட பெரிய பாசக்காரனா இருக்கியே என்று கட்டிக் கொள்கிறார். அந்த வகையில் நிலவுக்கு இந்த பிரச்சனை தீர்ந்து விடும். ஆனாலும் அண்ணி சொன்னபடி நிலா, சோழன் குடும்பத்தை விட்டு எங்கேயும் போக மாட்டார்.