இப்பொழுதுதான் இந்த செகண்ட் பார்ட் கலாச்சாரம் பெருகியுள்ளது. ஆரம்பத்தில் ஐடியாவே இல்லாமல் அதன் பின் முதல் பாகம் அடித்த விஸ்வரூப வெற்றியால் இரண்டாம் பாகம் எடுத்து மோசம் போன இயக்குனர்கள் பல பேர். அப்படி முதலில் தோன்றாமல் அதன்பின் தமிழில் எடுக்கப்பட்ட 5 செகண்ட் பார்ட் படங்கள்.
டிமான்டி காலனி: 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கினார். ரசிகர்களை சீட்டின் நுனியில் அமர வைத்த இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின் இரண்டாம் பாகத்திலும் கல்லா கட்டிவிடலாம் என ஆசைப்பட்டவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை.
சாமி: முதல் பாகத்தோடு இதற்கு முடிவு கட்டி விட்டார் இயக்குனர் ஹரி. ஆனால் படம் ஹிட்டாகி விட்டதே இன்னமும் இதற்கு நல்ல மவுஸ் இருக்கிறது என விக்ரமை வைத்து வைத்து சாமி இரண்டாம் பாகம் எடுத்தார். ஆனால் கோட்டா சீனிவாசன் ராவ் இல்லாத ஆறுச்சாமி ப்ளாப்பானது.
சண்டக்கோழி: விஷால் கேரியரில் இன்றும் சண்டக்கோழி படத்துக்கு தனி இடம் உண்டு. படத்தின் இயக்குனர் லிங்கசாமி, ராஜ்கிரண் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு ஹைப் ஏற்றி இயக்கியிருந்தார். ஆனால் அதே வேகத்தோடு எடுத்திருந்தால் கூட இரண்டாம் பாகம் ஹிட்டாகி இருக்கும் பல ஆண்டுகள் கழித்து எடுத்த படம் சோபிக்கவில்லை.
சந்திரமுகி: ஹிட் படங்கள் அமையாமல் துவண்டு போய் இருந்த ரஜினிக்கு சரியான ஹிட்டாக அமைந்தது பி. வாசு வாசு இயக்கிய சந்திரமுகி படம். பல ஆண்டுகள் கழித்து ராகவா லாரன்ஸை வைத்து எடுத்த இரண்டாம் பாகம் தலைவலி கொடுத்தது.
பாகுபலி : ஆரம்பத்தில் இந்த படத்தின் பெயரையே யாருக்கும் சரியாக வாசிக்க தெரியவில்லை. இந்த படம் ஆரம்பிக்கும் பொழுது இரண்டாம் பாகம் எடுக்கும் ஐடியா இல்லையாம். அதன் பின் முழித்துக் கொண்ட இயக்குனர் ராஜமௌலி இரண்டாம் பாகம் ஐடியாவை முன்னிறுத்தினார் ஆனால் முதல் பாகம் அளவிற்கு செகண்ட் பார்ட் சோபிக்கவில்லை.