Suriya: நடிகர் சூர்யா தன்னுடைய செல்வாக்கு மொத்தத்தையும் தமிழ் சினிமாவில் இழந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இனி ஏதாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்தால் தான் சூர்யாவால் மீண்டும் பழைய நிலைமைக்கு போக முடியும்.
முதல் கட்ட கதாநாயகர்கள் வரிசையில் வந்து கொண்டிருந்த சூர்யாவின் திடீர் வீழ்ச்சிக்கு அவருடைய மனைவிதான் காரணம் என்று பெரும்பாலாக பேசப்படுகிறது.
ஜோதிகா மும்பையில் குடி ஏறியது, இந்தி படங்களில் நடிப்பது, மாடலான துணிகள் போடுவது என இருப்பதால் தான் தமிழ்நாட்டில் சூர்யாவுக்கு எல்லாம் நெகட்டிவாக மாறுகிறது என சொல்லப்படுகிறது. இது குறித்து வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
சூர்யாவின் திடீர் வீழ்ச்சி
இதில் சூர்யாவின் வீழ்ச்சிக்கு ஜோதிகா எந்த ஒரு வகையிலும் காரணம் கிடையாது. உண்மையில் சூர்யா தன் நிலை என்ன என்பதை உணர்ந்து கொண்டு அதற்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும்.
எத்தனை பேர் கதை கேட்டு சரி என்று சொன்னாலும் ஒரு ஹீரோ தனக்கு இந்த கதை செட் ஆகுமா என்பதை யோசித்துப் பார்த்து தான் நடிக்க வேண்டும். சூர்யா அஜித், விஜய் ரேஞ்சுக்கு நாம் ஸ்கிரீனில் வந்தாலே படம் ஹிட் ஆகிவிடும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த எண்ணம் மாறி, நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தால் விஜயின் வெற்றிடத்தையே அவர் நிரப்பி விடலாம். மேலும் ஜெய் பீம் படத்தில் குறிப்பிட்ட சாதி அமைப்பு பற்றிய குறியீடு பயன்படுத்தப்பட்டது இன்று வரை சூர்யாவுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது.
அவருடைய படம் ரிலீஸ் ஆனாலே அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் நெகட்டிவிட்டியை பரப்புகிறார்கள். இதை எல்லாம் தாண்டி ஜோதிகாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பேசி இருக்கிறார்.