Suriya: வெற்றிமாறன் தன்னுடைய பேட்டியில் வாடிவாசல் படம் எடுப்பது உறுதி என்று சொல்லி இருந்தார். இதனால் சூர்யா ரசிகர்கள் உச்சி குளிர்ந்து போயிருந்தார்கள். உண்மையில் வாடிவாசல் படம் மட்டும் தான் உறுதி, அதில் சூர்யா நடிப்பது உறுதி இல்லை என பிரபலம் ஒருவர் சொல்லியிருக்கிறார்.
வெற்றிமாறன் முதலில் சூர்யாவை வைத்து தான் வாடிவாசல் படம் எடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அதில் முக்கியமான கேரக்டரில் அமீர் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் நினைக்கிறார். அமீரிலிருந்து, கதையில் ஒரு சில விஷயங்கள் வரை சூர்யா எதற்குமே ஒத்துப் போகவில்லையாம்.
வாடிவாசலில் சூர்யா இல்லை
சமரசம் பேசி கலைப்புலி தாணு எப்படியாவது படத்தை முடித்து விடலாம் என சமூக வலைதளத்தில் வீடியோவும் வெளியிட்டார். ஆனால் இதில் எதுவுமே பலிக்கவில்லை. வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை தனுசை வைத்து தான் இயக்கப் போகிறார்.
தனுஷ் தான் எந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் வாடி வாசலுக்காக அழைப்பு வந்தால் கண்டிப்பாக ஓடி வந்து விடுகிறேன் என வாக்கு கொடுத்து இருக்கிறாராம். வெற்றிமாறனின் ஈகோவை சூர்யா ரொம்ப தூண்டி விட்டதால் தான் இப்படி ஒரு முடிவு என வலைப்பேச்சு பிஸ்மி சொல்லி இருக்கிறார்.