சண்முகம் சௌந்தர்யாவை கல்யாணம் செய்கிறேன் என்று தனத்திடம் கூறுகிறான். ஆனால் சண்முகம் அம்மா ருக்கு வீட்டுக்கு வந்து உன்னுடைய பொண்ண என் பையன் கல்யாணம் செய்ய மாட்டான். அவன் வந்து கட்டிக்கிறேன் சொன்னாலும் நீ வேண்டாம் என்று சொல்லு என்று சொல்லிட்டு போகிறாள்.
தனம் பேங்க் கு பணம் கட்டியதால் வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கியது கண்டு ருக்குமணி சந்தோஷமா இருக்கிறாள், அதற்கு தனம் தான் காரணம் என்று தனத்தை பாராட்டுகிறாள்.
ராதிகா கதிருக்கு ஹெல்ப் பண்ணும் போது நீ ஒன்னும் செய்ய வேண்டாம் என்று கதிர் சொல்வதை கேட்காமல் பிடிவாதமாக ராதிகா கதிருக்கு ஹெல்ப் செய்கிறாள்.
நிலாவின் பிறந்தநாளுக்கு டிரஸ் எடுக்க தனம், ஷாலினியுடன் ஜவுளிக் கடைக்கு சென்று நிலா குட்டிக்கு Dress எடுத்ததோடு இல்லாமல் நகை கடைக்கு போகலாம் என்று தனம் ஷாலினியுடன் கூறுகிறாள்.
தனம் ருக்குமணியிடம் நிலா Birthday-க்கு நானும், ஷாலினியும் போகிறோம். அதனால் நிலாவுக்கு Dress-ம், மோதிரம் வாங்கி இருக்கிறேன் பாருங்க என்று காட்டுகிறாள்.
மரகதம் தனத்திடம் நாம இப்ப இருக்கிற நிலைமையில் ஒரு Dress மட்டும் போதாதா, எதுக்கு மோதிரம் வாங்கி இருக்க, நாம் அவளுக்கு இரத்த சொந்தமா என்று கேட்கிறாள். அதற்கு தனம் நிலா பாப்பா ரத்த சொந்தம் இல்லாட்டினாலும் நம்ம மேல பாசமா இருக்கிறாள் அதனால் எடுத்தேன் என்று கூறுகிறாள்.
நமக்கு வீட்டுக்கு லோன் சத்ரியன், ஷாலினி படிப்பு செலவு இதற்கெல்லாம் நிறைய பணம் தேவைப்படுது. Night ஆட்டோ ஓட்டினால் நமக்கு நிறைய பணம் கிடைக்கும். அதனால் நான் நைட் சவாரி போகிறேன் என்னை கண்டு நீங்க பயப்பட வேண்டாம் என்று ருக்மணியிடம் தனம் சொல்லிட்டு சவாரிக்கு போகிறாள்.
சௌந்தர்யா சண்முகம் கல்யாணம் நடக்குமா இல்லையா என இனிவரும் எபிசொட் இல் பார்க்கலாம்.