Parthiban : 90’s காலகட்டத்தில் சினிமாவில் ஒரு நடிகராக உச்சநிலையை தொட்ட நடிகர் பார்த்திபன். தனது அழகை காட்டிலும், தனது திறமையை காட்டியே ரசிகர்களை ஈர்த்தவர்.
வித்தியாசமான கதைக்களம்..
பாரம்பரியமான கதைகளை ஒரு வித்தியாசமான முறையில் மக்களுக்கு சொல்லும் பாணியில் உருவாக்குபவர் பார்த்திபன். 2019- ஆம் ஆண்டு வெளியான ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படம் இவரே இயக்கி இவரே நடித்து ஹிட் கொடுத்த படம். படத்திற்கு பல விருதுகளும், மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.
திறமையான இயக்குனர்கள்..
இந்நிலையில் பார்த்திபன் வளர்த்து விட்ட 5 இயக்குனர்கள் இருக்கிறார்கள். இன்று பயங்கர ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள்.
இதைப் பற்றி பார்த்திபனே ஒரு பேட்டியில் கூறியிருப்பது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கூறியதாவது, ” 10 பேர் ஒரு படம் எடுக்க போறோம் என்றால், அதில் நிறைய திறமை வாய்ந்த துணை இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்கிட்ட துணையை இயக்குனராக வேலை செய்பவர்கள் முதலில் வரும் போது அவர்களும் வேலைய கத்துக் கொண்டுதான் வந்திருப்பார்கள்.
மணி விக்ரமன் என்ற பெயரில் என்னிடம் துணை இயக்குனராக பணி புரிந்தார். ஆனால் எப்போது அவரை பார்க்கும் போது நமக்கே சம்மந்தம் இல்லாத வெற்றியா தெரிகிறது. அந்த அளவிற்கு அவரோட படங்கள் எல்லாம் சில்வர் ஜூப்லியா இருக்கிறது. அவருடைய வெற்றி மகிழ்ச்சியாக இருந்தது.
கரு பழனியப்பன் :
இவரை சந்திக்கும் போதே இவர்கிட்ட நிறைய அறிவு திறமை இருந்தது. சில நேரங்களில் இவர்கிட்ட கொஞ்சம் கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு யோசிப்பேன். இயக்குனரான என் மேல் மரியாதையும், அன்பும் வைத்து பார்த்திபன் கனவு என்று திரைப்படத்தை இயக்கினார்.
H.வினோத்
அதே மாதிரி ஹச் வினோத் என்னிடம் வேலை செய்யும் போது உட்காருங்கள் என்று சொன்னால் கூட உட்கார மாட்டார். ரொம்ப அமைதியான மனுஷன். இந்த அளவுக்கு உயர்ந்த நிற்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். இவரோட வளர்ச்சியை பார்க்கும்போது, என்கிட்ட தான் துணை இயக்குனரா வேலை செஞ்சாரா சந்தேகமா இருக்கும். அந்த அளவுக்கு அவரது வெற்றியைப் பார்த்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது.
எழில் :
எங்கிட்ட துணை இயக்குனராக வேலை செய்தவர் எழில் துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து ஹிட் கொடுத்தவர் இவர். நல்ல ஒரு திறமை வாய்ந்த இயக்குனர். இப்படி என்கிட்ட நிறைய பேர் துணை இயக்குனராக பணிபுரிந்து இன்று பெரிய அளவில் இருக்கிறார்கள்- பார்த்திபன்.