OTT Movies : இந்த வாரம் தியேட்டரில் 3BHK, பறந்து போ என எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது. ஓடிடியிலும் நிறைய படங்கள் வெளியாகும் நிலையில் தமிழில் 5 படங்கள் வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் படம் ஜூன் 5-ம் தேதி தியேட்டரில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் தியேட்டரில் கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கி விட்டது.
தக் லைஃப் படம் வெளியாகி இரண்டு மாதத்திற்கு பிறகு தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படத்திற்கு இரண்டாவது நாளே தியேட்டரில் பெரிய கூட்டம் வராத நிலையில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஒரு மாதத்தில் வெளியாகிறது.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 தமிழ் படங்கள்
ஆகையால் ஜூன் நான்காம் தேதி நெட்பிளிக்சில் தக் லைஃப் படம் வெளியாக இருக்கிறது. கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளி வெங்கட், சத்யராஜ் மற்றும் ரோஷினி ஆகியோர் நடிப்பில் மெட்ராஸ் மேட்னி படம் வெளியாகி இருந்தது.
ஜூன் நான்காம் தேதி தியேட்டரில் வெளியான இந்த படம் இப்போது அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது. விமல் நடிப்பில் ஹாரர் படமாக வெளியான பரமசிவன் பாத்திமா படம் ஆகா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பிரபு நடிப்பில் வெளியான ராஜபுத்திரன் படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மேலும் பிரியாமணி நடிப்பில் உருவான குட் வைஃப் படம் ஹாட் ஸ்டார் சீரிஸில் வெளியாக இருக்கிறது. ஆகையால் தியேட்டரைப் போல இந்த வாரம் ஓடிடியிலும் ரசிகர்கள் கொண்டாடும் படியான படங்கள் வெளியாகிறது.