Yogibabu : காமெடி நடிகராக ஜொலித்து கொண்டிருக்கும் “யோகிபாபு” அவர்கள் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரும் ஆவார். இவர் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வெற்றி கண்டவர். இவர் கதாநாயகனாகா “மண்டேலா” மற்றும் சில படங்களில் பணியாற்றியுள்ளார்.
இவர் காமெடி நடிகராக விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பாலிவுட் அளவிலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். நகைச்சுவை நடிகராக ஏற்பட்ட படங்களில் நடித்து க்ளிக்கி கொண்டிருக்கும் “யோகிபாபு ” அவ்வாறு இவர் சமீபத்திய பேட்டி ஒன்று ஒரு சில விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
அதாவது யோகி பாபு நடித்து வெற்றி கண்ட படமான மண்டேலா படத்தின் கதையை இவர் கேட்ட விதத்தை கூறியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் மண்டேலா படத்தின் கதையை சூட்டிங் முடித்து வந்த களைப்பில் படுத்து கொண்டே கேட்டதாகவும். டைரக்டர் அஸ்வின் அவர்களையும் படுத்துக்கொண்டே கதை சொல்லுங்கள் என கூறினேன். டைரக்டர் அஸ்வின் மற்றும் நெல்சன் ஆகியவர்கள் இந்த படம் உங்களுக்கு நன்றாக இருக்கும் பண்ணுங்கள் என கூறினார்கள்.
அதை ஏற்றுக் கொண்டு நானும் அந்த படத்தில் நடித்தேன். ஒரு சில விஷயங்களுக்காக அந்த படத்தில் நடிக்க தயங்குகினேன் பிறகு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் தான். அந்த ஒரு ஓட்டை வைத்து நம்மால் எவ்வளவு நல்ல காரியம் செய்ய முடியும் என்றால் எப்படி செய்வது என்று யோசித்து பிறகு அந்த படத்தில் நடித்தேன். அவ்வாறு நான் நடித்த “மண்டேலா” படம் நன் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு வெற்றியை தந்தது.
தேசிய விருதை தட்டி தூக்கிய சம்பவம்..
ஒரு நாள் திடீரென்று போன் வந்தது அந்த போனில்“மண்டேலா” படத்திற்கு “தேசிய விருது” கிடைத்துள்ளது என்று கூறினார்கள். அதைக் கேட்டவுடன் மிகுந்த சந்தோஷம். பிறகு ஒரு நாள் திரும்பவும் போனில் “ஆஸ்கார்” அவார்டுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். அதைக் கேட்டவுடன் இந்த மூஞ்சையும் வைத்து படம் பண்ணி, அவ்வளவு தூரம் கொண்டுபோனது பெரிய விஷயம் என்று கூறினேன் என்றும் கூறியுள்ளார்.
அதே போல் நிறைய திறமை உள்ள அசிஸ்டன்ட் டைரக்டர்கள் இருக்கிறார்கள். நான் அனைத்துக்கும் தயாராக உள்ளேன். என்னால் முடிந்த அளவிற்கு உங்களுக்கு உதவி செய்கிறேன். சம்பளம் பற்றி எல்லாம் கவலை இல்லை பேசிக் கொள்ளலாம் நீங்கள் வாருங்கள் படம் செய்யலாம் என அன்பு நிறைந்த உள்ளத்தோடு அழைப்புகளை விடுத்துள்ளார் “யோகி பாபு“. இவ்வாறு இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.