Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்ற வருத்தத்தில் பாக்யா குடும்பத்தில் நொந்து போய் இருக்கிறார்கள். அப்பொழுது செழியன், ஆரம்பத்திலிருந்து அம்மா இந்த சம்பந்தம் வேண்டாம் என்று சொன்னாங்க. ஆனால் நாம் யாரும் கேட்காமல் பிடிவாதமாக இனியாவுக்கு அந்த நித்தேஷை கல்யாணம் பண்ணி வைத்து தவறு பண்ணிட்டோம் என்று சொல்கிறார்.
உடனே கோபி, எல்லாத்துக்கும் காரணம் நான் தான். என் மீது தான் முழுக்க முழுக்க தவறு இருக்கிறது என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். அப்பொழுது ஈஸ்வரி, நம் மீது என்ன தவறு இருக்கிறது எல்லாத்துக்கும் காரணம் இந்த இனியா தான். இனிய தேவையில்லாமல் ஆகாஷ் இடம் பேசி பழகியதால் வேற வழி இல்லாமல் அவசரமாக நம் வேறு கல்யாணம் பண்ணி வைக்கிற சூழ்நிலை ஆகிவிட்டது என்று எல்லா தவறையும் இனியா மீது போட்டு விடுகிறார்.
இதைக் கேட்ட பாக்யாவுக்கு கோபம் வந்து இனிய என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதை தெரிந்தும் ஏன் இப்படி பேசுறீங்க. அவ வயசுக்கு ஏதோ தவறு பண்ணிட்டாலும் நாம் பெரியவங்க தானே, நிறுத்தி நிதானமாக யோசித்து முடிவு எடுத்திருக்கலாமே, அது மட்டுமா நம் பேசக்கூடாது என்று சொல்லியதும் இவளும் ஆகாசும் ஒதுங்கி விட்டாங்க. ஆனால் அப்பொழுது கூட நீங்கள் யாரும் நம்பாமல் மிரட்டி சென்டிமெண்டாக பேசி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிட்டீங்க.
இப்பொழுது என் மகளின் வாழ்க்கை தான் வீணாகிவிட்டது என்று பாக்கியம் கதறுகிறார். ஆனாலும் இதை இப்படியே விடக்கூடாது என்று சொல்லி சுதாகர் வீட்டிற்கு கோபமாக கிளம்புகிறார். உடனே கோபி நானும் வருகிறேன் என்று சொல்லி சுதாகர் வீட்டுக்கு போய் நியாயம் கேட்கிறார்கள். அப்பொழுது வாக்குவாதமான நிலையில் சுதாகர் உங்களால் என்ன பண்ண முடியுமோ போய் பண்ணிக்கோங்க என்று திமிராக பேச ஆரம்பித்து விட்டார்.
சுதாகரும் அவருடைய மனைவியும் அடாவடித்தனமாக பேசிய நிலையில் அவர்களிடம் போய் புள்ள பூச்சியாக பாக்யா நியாயம் கேட்பது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறது. இருந்தாலும் கோபியும் பாக்கியாவும், உங்களை சும்மா விடமாட்டோம் இதற்கான தண்டனையை நீங்கள் அனுபவித்தே ஆகணும் என்று சண்டை போட்டு போய் விடுகிறார்கள். அந்த வகையில் இனியாவிற்கும் நித்தேசுக்கும் அடுத்து விவாகரத்து ஆகப் போகிறது.