Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனாவின் தங்கை சீதாவின் கல்யாண ஏற்பாடுகள் பலமாக நடைபெற ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில் முத்து மற்றும் மீனா செலவு பண்ணி சீதாவின் கல்யாணத்தை நடத்தப் போகிறார்கள். இவர்களுக்கு உதவி செய்யும் விதமாக அண்ணாமலை அவருடைய பணத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துட்டு வந்து கொடுக்கிறார்.
இதை பார்த்ததும் விஜயா வழக்கம் போல் திட்டி மீனாவை அசிங்கப்படுத்துகிறார். அதனால் மீனாவும், அண்ணாமலையிடம் எனக்கு பணம் ஏதும் வேண்டாம். உங்கள் ஆசிர்வாதம் மட்டும் போதும் என்று சொல்கிறார். ஆனால் அண்ணாமலை, சீதாவும் என்னுடைய மகள் மாதிரி தான் அவளுக்கு செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று சொல்லி பணத்தை கொடுக்கிறார்.
பிறகு ரவி, என்னுடைய பங்கு சீதாவின் கல்யாணத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு அனைத்தும் நானும் என்னுடைய டீமும் செய்து மொத்த செலவையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிடுகிறார். இதை பார்த்த சுருதி இது மட்டும் போதாது. அதனால் என்னுடைய பங்கு சீதாவுக்கு மூன்று சவரன் செயின் வாங்கி கொடுக்கிறேன் என்று சொன்னதும் விஜயா ஆச்சரியமாக பார்க்க ஆரம்பித்து விட்டார்.
ஆனாலும் சுருதி, யார் சொன்னாலும் கேட்க மாட்டார் என்பதற்காக விஜய வாயை மூடி கொண்டார். உடனே அண்ணாமலை, மனோஜிடம் என்ன பண்ணப் போகிறாய் என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி, சீதாவிற்கு பிரைடல் மேக்கப் நான் பண்ணி விடுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். ஆனால் மனோஜ் வாய் திறந்து எதுவும் சொல்லாததால் அண்ணாமலை, உன் கடையிலிருந்து கிரைண்டர் மிக்ஸி எடுத்துட்டு வந்து குடு என ஆர்டர் போட்டு விடுகிறார்.
இப்படி ஒவ்வொருவரும் அவங்களுடைய பங்குக்கு மீனாவின் தங்கை சீதாவின் கல்யாணத்திற்காக உதவி செய்ய தயாராகி விட்டார்கள். இதை பார்த்த ரோகினி, சீதாவின் கல்யாணத்துக்கு மட்டும் பணம் கொடுத்து உதவி பண்றீங்க. நான் கேட்டபோது இல்லை என்று சொன்னிங்களே என கேட்கிறார். அதற்கு சுருதி, எந்த சூழ்நிலையில் நாம் எப்படி உதவி பண்ணுகிறோம் என்பது இருக்கிறது.
அதே மாதிரி மீனா யாருடைய பணத்துக்காகவும் ஆசைப்படறாங்க கிடையாது, சீதாவும் என்னுடைய கல்யாணத்துக்கு நிறைய உதவி செய்திருக்கிறார் என்று சொல்லி விடுகிறார். பிறகு ரோகிணியின் பிளாக்மெயில் நபர் போன் பண்ணி பணத்தை கேட்கிறார். இல்லை என்றால் நான் முத்துவிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் ரோகிணி என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
பிறகு மீனா மற்றும் சுருதி இருவரும் கல்யாண விஷயமாக வெளியே போகும் பொழுது பூஜை ரூமில் சீதாவுக்காக எடுத்த நகையை ரோகிணி பார்க்கிறார். உடனே ரோகிணி, பிளாக் மெயில் பண்ணிய நபருக்கு போன் பண்ணி வீட்டில் யாரும் இல்லை. நீங்கள் பூஜை ரூமில் இருக்கும் நகை பணத்தை எடுத்துட்டு போகலாம் என்று ஐடியா கொடுக்கிறார். அதன்படி அவரும் வந்து எல்லாத்தையும் எடுத்துட்டு போகும்போது மனோஜ் உள்ளே வந்து விடுகிறார்.
ஆனால் மனோஜ் ஒரு ஏமாளி என்பதால் ஈசியாக மனோஜிடமிருந்து அந்த நபர் தப்பித்து விடுவார். ஆனாலும் ரோகிணி அவருடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்வதற்காக இப்படிப்பட்ட ஒரு வேலையை செய்துவிட்டார். இந்த திருட்டு விஷயத்தால் நிச்சயம் ரோகினி, முத்துவிடம் மாட்டிக் கொண்டு முழிக்க போகிறார்.