Parandhu Po Review: இயக்குனர் ராம் படங்கள் ரொம்பவே தனித்துவம் வாய்ந்தது. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என அவருடைய ஒவ்வொரு படைப்பும் ஒரு காவியம் தான்.

அந்த வரிசையில் பெற்றோர்களுக்கான படமாக வருகிறது பறந்து போ. ராம் இயக்கத்தில் சிவா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்றுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.

அதற்கு முன்பு பத்திரிக்கையாளர்களுக்கான ஷோ நடத்தப்பட்டுள்ளது. அதை பார்த்த சினிமா விமர்சகர்கள் அனைவரும் தற்போது படத்தை மனதார பாராட்டி வருகின்றனர். அதன் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.

அனைவருமே ராமின் எதார்த்தமான கதை மற்றும் காமெடி ரசித்து பாராட்டி வருகின்றனர். இத்தனை நாள் இந்த நகைச்சுவை எல்லாம் எங்கே வைத்திருந்தீர்கள்.

சிவாவுக்கு இந்த படம் நிச்சயம் அவருடைய திரை பயணத்தில் சிறந்த படமாக இருக்கும். அதேபோல் அவருடைய நடிப்பும் பார்ப்பவர்களுக்கு வித்யாசமான அனுபவம். இசை, வசனங்கள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது.

ஆக மொத்தம் படம் குழந்தைகளுக்காக பெற்றோர்கள் செய்யும் தியாகங்களுக்கு ஒரு சமர்ப்பணமாக இருக்கிறது. ரசிகர்களுக்கும் ஃபீல் குட் உணர்வை கொடுக்கும் என விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.