Sai Abhyankar : அனிருத் எப்படி மிகக் குறுகிய காலத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களின் இசையமைத்தாரோ அதேபோல் வளர்ந்து வருகிறார் சாய் அபயங்கர். இவருடைய ஒரு படம் வெளியாவதற்கு முன்னிலையிலே 6 படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதுவும் பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்திருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இளம் வயதில் அனிருத் இவ்வாறு பெரிய நடிகர்களின் படங்களை இசையமைத்தது தான் சாய் அபயங்கரை பார்க்கும் போது நினைவுபடுத்துகிறது.
இப்போது அவரது கைவசம் இருக்கும் படங்களை பார்க்கலாம். பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் பென்ஸ் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதுதான் அவருடைய அறிமுக படமாக உள்ளது.
சாய் அபயங்கர் கைவசம் இருக்கும் ஏழு படங்கள்
அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி மற்றும் சூர்யா நடிப்பில் உருவாகும் கருப்பு படத்திற்கும் இவர் தான் இசையமைப்பாளர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகிறது. இதுவும் சாய் அபயங்கர் லைன் அப்பில் இருக்கிறது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனின் DUDE படமும் சாய் கைவசம் தான் இருக்கிறது. சிம்பு மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணா கூட்டணியில் உருவாகும் படம் மற்றும் சிவகார்த்திகேயனின் 24 ஆவது படம் ஆகியவற்றிற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருக்கிறார்.
ஷேன் நிஜாமின், சாந்தனு பாக்கியராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் பல்டி படத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார். ஆகையால் அடுத்த வருடம் முழுக்க சாய் அபயங்கர் இசை தான் முக்கால்வாசி படங்களில் இருக்க உள்ளது.