Ranbir Kapoor : நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய்பல்லவி மற்றும் சன்னி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிறது இராமாயணா. இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அறிமுகத்தை வெளிப்படுத்தும்படி இது அமைந்திருக்கிறது.
ராமனாக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். புராண காவியமான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறது ராமாயணா படம். இப்போது வெளியாகியிருக்கும் டீசர் ராமன் மற்றும் ராவணன் இடையே ஆன மோதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
அதுவும் திரையில் அதை காட்சிப்படுத்துதல் மிகவும் பிரம்மாண்டமாகவும், அழகாகவும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற DNEG ஸ்டுடியோவின் பிஎஃப்எக்ஸ் காட்சிகள் படத்தின் தரத்தை அதிகரிக்க செய்திருக்கிறது.
கவனம் ஈர்த்த ரன்பீர் கபூரின் ராமாயண டீசர்
வானத்தைக் கிழித்து அம்பு செல்லும் காட்சி பிரமிக்க வைக்கிறது. அதுவும் மிகவும் வண்ணமயமாக காட்சியமைக்கப்பட்டு இருக்கிறது. படத்திற்கு ஏஆர் ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்தக இசையமைத்துள்ளனர். மேலும் ராமாயணம் படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது.
முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. 2027 ஆம் ஆண்டு தீபாவளியில் இரண்டாம் பாகத்தை வெளியிட முடிவு செய்து இருக்கின்றனர். மேலும் இந்த டீசர் இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் 3000 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையில் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் மோதி கொள்ளும் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.