Vels Films International : ஐசரி கணேஷ் நிறுவனம் இப்போது ஆயிரம் கோடி முதலீட்டில் படங்களை தயாரிக்க இருக்கிறது. சன் பிக்சர்ஸ், லைக்கா போன்ற ஒரு பிரம்மாண்ட நிறுவனமாக தனது தயாரிப்பு நிறுவனத்தை மாற்ற உள்ளனர். இதற்காக பெரிய செட், முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர்கள், சிறந்த பிஎஃப்எக்ஸ் போன்ற வலுவான விஷயங்களை இறக்குகின்றனர்.
ஆரம்பத்தில் 200 முதல் 300 கோடி பட்ஜெட் மட்டுமே செய்து வந்த இவர்கள் இப்போது ஆயிரத்தில் இருந்து 2000 கோடி வரை இறக்க இருக்கின்றனர். இதற்கான காரணங்களை பார்க்கலாம். அதாவது பெரிய படங்களுக்கு அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகை தர தயாராக இருக்கின்றனர்.
அதோடு வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பு மட்டுமல்லாமல் விநியோகம் மற்றும் டிஜிட்டல் உரிமைகளையும் மேற்கொள்கிறது. மேலும் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தேசிய பங்குச் சந்தையில் இருக்கிறது.
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்கான காரணம்
ஆகையால் மக்களிடமிருந்து நிதியை திரட்டி படங்களை எடுக்கின்றனர். இதனால் வருடத்திற்கு ஒன்று மற்றும் இரண்டு போன்ற படங்களை எடுத்து நஷ்டம் என்று சொன்னால் அது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கும் லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.
மேலும் பெரிய அளவிலான முதலீடுகளுக்கு பங்குச்சந்தையில் இருப்பதால் வேல்ஸ் நிறுவனம் பல கோடிகள் முதலீடு செய்வது சாத்தியமாக்கி உள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நம்பகத்தன்மை கொண்ட தயாரிப்பு நிறுவனமாக வேல்ஸ் நிறுவனம் இருக்கும்.
இப்போது சுந்தர் சி, கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற முன்னணி இயக்குனர்கள் உடனும் நயன்தாரா, தனுஷ், ஆர்யா, ரவி மோகன் போன்ற முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்ற இருக்கின்றனர்.