ஆஹா கல்யாணம் சீரியலில் சூர்யா தாத்தாவிடம் பொருள் எல்லாம் வச்சு ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சொல்கிறான்.உடனே தாத்தாவும் நல்லா இருப்பா என்று ஆசீர்வாதம் செய்கிறார்.
சூர்யா எக்ஸிபிஷன் போகிறான் பொருளை விற்பதற்கு எக்ஸிபிஷன் போகிறான். அங்கு வியாபாரம் நல்ல நடந்தது வீட்டுக்கு வந்து இன்னைக்கு எக்ஸிபிஷன்ல போட்ட ஸ்டால் ரொம்ப நல்லா போச்சு தாத்தா என்று சூர்யா சொல்கிறான். வீட்டில் எல்லாரும் சந்தோஷபடுறாங்க.
ஆனால் அனாமிக்கா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்க வேண்டாம் இப்ப இங்க எல்லாமே ஆன்லைன் யோகமா மாறிடுச்சு உட்கார்ந்த இடத்துல இருந்தே ஷாப்பிங் பட்டனை தட்டுனா வீட்டுக்கு பொருள் வந்து சேர்ந்துரும் இந்த காலத்துல இதெல்லாம் சரியா வருமா என்று யோசிச்சிக்கோங்க சூரிய என்று சொல்கிறாள்.
ஐஸ்வர்யா இப்பதான் இப்படி ஐடியா இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு அதுக்குள்ள இப்படி நெகட்டிவா பேசிட்டு இருக்க சாப்பிடுற சாப்பாட்டுக்கு உண்மையா இருக்கணும் அனாமிக்கா என்று சொல்கிறாள்.
எனக்கு இது வொர்க் அவுட் ஆகுமான்னு டவுட்டா இருந்துச்சு அதான் நான் சொன்னேன் ஏன் அத கூட நான் சொல்லக்கூடாதா என அனாமிக்கா சொல்ல இல்ல அனாமிக்கா இந்த மாதிரி விஷயங்களை நம்ம பாராட்டணும் என்று ராஜலக்ஷ்மி சொல்கிறாள்.
சூர்யா நம்ம ஒரு விஷயம் ஆரம்பிக்கும் போது எல்லாமே நமக்கு சாதகமா அமையணும் ஒன்னும் இல்லையே இப்படி சில எதிர்ப்புகளும் வரத்தான் செய்யும். இந்த ரச்சனைகளை எப்படி சரி பண்றதுன்னு நீ யோசிப்பா ஆன்லைன்ல தான் வாங்குவாங்கன்னா நீயும் ஆன்லைன்ல வாங்குவதற்கு வழிய பண்ணு என்று ராஜலக்ஷ்மி சொல்கிறாள்.
கோடீஸ்வரி மாப்பிள்ளை சொல்றதெல்லாம் நல்லாதான் இருக்கு ஆனா இதெல்லாம் நடக்க ரொம்ப நாள் ஆகும் போல இருக்கே இன்னைக்கு
இருக்கற பிரச்சனையை எப்படி சமாளிக்கிறது என்று சொல்கிறாள்.
தாத்தா பாட்டியோட மருந்து செலவு. ஐஸ்வர்யாவுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல பிரசவ செலவு வந்துடும் அதுவும் நார்மல் டெலிவரினா சமாளிச்சடலாம். ஒருவேளை சிசரியன் ஆச்சுன்னு வச்சுக்கோ லட்ச ரூபாய்க்கு மேல செலவாகும் இதெல்லாம் யோசிக்கணும்ல என்று சூர்யா வருத்தப்படுகிறான்.
நாம சாப்பிடற சாப்பாடு வாழற வாழ்க்கை முறை இப்படி எல்லாம் மாறுனா கூட நம்மள சுத்தி இருக்கிற உறவுகள் எமோஷன்ஸ், சாமி கும்பிடுறது இதெல்லாம் எப்போதும் மாறாது. இத பாருங்க வீட்ல எப்பவுமே பணத்தேவை அன்றாட பிரச்சனை எல்லாம் எப்பவுமே இருக்கதான் செய்யும். இதுக்கெல்லாம் டிஸ்டர்ப் ஆகி சராசரி மனுஷனா யோசிக்காம பிசினஸ் மேன் சூர்யாவா யோசிங்க என்று மகா சூர்யாவிடம் கூறுகிறாள்.