ஒரு நடிகனாக சூர்யா அடைந்த உயரத்தை விட நல் உள்ளத்தில் பிதாமகனாகவே பார்க்கப்படுகிறார். இன்று சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்து வருகிறார். அஜித், விஜய்க்கு அடுத்த வரிசையில் சினிமாவில் இவரை வைத்து பார்த்த காலங்களும் உண்டு.
ஆகஸ்ட் 3ஆம் தேதி சூர்யாவை பார்க்க எல்லோருக்கும் ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜில் அவர் ஒரு விழா நடத்துகிறார். பல ஏழை எளிய மாணவர்களுக்கு தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலமாக கல்வி கொடுத்து வருகிறார்.
அதில் படித்த மாணவர்கள் இன்று பல பேர் முன்னேறி நல்ல ஒரு இடத்தில் இருக்கிறார்கள். அகரம் பவுண்டேஷன் ஆபீஸ் தியாகராய நகரில் இருக்கிறது. சூர்யாவின் இந்த அகரம் பவுண்டேசன் ஆரம்பித்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிவிட்டது.
இதை கொண்டாடும் விதமாக தான் ஆகஸ்ட் 3ஆம் தேதி சாய்ராம் இன்ஜினியரிங் காலேஜில் விழா எடுத்துள்ளனர். அதற்காக சிறப்பு விருந்தினராக கமல் மற்றும் அமீர் கான் இருவரும் அந்த காலேஜுக்கு காலேஜுக்கு வருகை தர உள்ளனர்.
அகரம் மூலமாக சூர்யா எவ்வளவோ நல்ல விஷயங்களை செய்துள்ளார். ஆனால் அது மக்களிடம் முழுவதுமாக சென்றடையவில்லை. சத்தமே இல்லாமல் தொடங்கப்பட்ட இந்த அகரம் பவுண்டேஷன் இன்று 15 வருடங்கள் ஆகிவிட்டது என்பதே பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையிலேயே சூர்யா பாராட்டப்பட வேண்டிய மனிதர்.