Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா இந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றால் சின்ன சின்ன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று சோழன் முடிவு பண்ணி விட்டார். அதனால் அண்ணன் மற்றும் தம்பிகளிடம் பேசி தனியாக ஒரு பாத்ரூம் கட்டிக் கொடுக்கலாம் என்று முடிவெடுத்து விட்டார்கள்.
அந்த வகையில் நான்கு பேரும் சேர்ந்து பணத்தை பங்கு போட்டு அதன் மூலம் நிலாவுக்கு ஒரு தனி பாத்ரூம் கட்டுவதற்கு வேலை ஆரம்பமாகிவிட்டது. நிலாவுக்கு தெரிந்த நிலையில் இதெல்லாம் வேண்டாம் வீண் செலவு என்று சொல்லிப் பார்க்கிறார். ஆனால் சோழன், எங்களுக்காக நீங்கள் இந்த வீட்டில் தங்குவதற்கு சம்மதித்திருக்கிறாய்.
அதனால் எங்களால் முடிந்த ஒரு சின்ன விஷயத்தை பண்ணுகிறோம் என்று சொல்லிவிடுகிறார். அடுத்து பாண்டியன், வானதியை நினைத்து ரொம்ப பீல் பண்ணுகிறார். பாண்டியனின் உணர்வை புரிந்து கொண்ட வானதி, பாண்டியனை சீண்டும் விதமாக என்னை பொண்ணு பார்க்க வருகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் எங்களுக்கு கல்யாணம் நடந்து விடும் என்று உசுப்பேத்தி விட்டு போகிறார்.
அடுத்ததாக அண்ணன் தம்பிகள் நிலா என்று அனைவரும் ஒட்டுமொத்தமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது கார்த்திகா வீட்டில் உள்ள கல்யாண ஏற்பாடுகள் பலமாக இருக்கிறது. அதிலும் இவர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்று பாட்டு சத்தத்தை அதிகமாக வைக்கிறார்கள். இதனால் சேரன் ரொம்பவே பீல் பண்ணி தனியாக அழ ஆரம்பித்து விடுகிறார்.
சேரனின் கஷ்டத்தை தெரிந்து கொண்ட தம்பிகள் நிலாவிடம் புலம்புகிறார்கள். அந்த சமயத்தில் கார்த்திகா, சேரனை தேடி வீட்டிற்கு வருகிறார். வந்ததும் நிலாவிடம் மற்றும் தம்பிகளிடமும் என்னால் சேரன் மாமா இல்லாமல் இருக்க முடியாது. எப்படியாவது என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வைத்து விடுங்கள் என்று கதறி அழுகிறார். அந்த வகையில் வீட்டை விட்டு ஓடி வந்த கார்த்திகாவுக்கு சேரனுக்கும் தம்பிகள் மற்றும் நிலா சேர்ந்து கல்யாணத்தை பண்ணி வைக்க போகிறார்கள்.