Director Cheran: இப்போதெல்லாம் ஆடியன்சை தியேட்டர் பக்கம் வர வைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. ஓடிடி தளங்களின் ஆதிக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்களை கவரக்கூடிய கதை இல்லை என்பது தான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.
முன்பெல்லாம் ஒரு படம் 150, 200 நாட்கள் என ஓடிய சரித்திரங்களும் இருக்கிறது. ஆனால் இப்போது ஒரு படம் ஒரு வாரம் தியேட்டரில் ஓடினாலே அது பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
அதிலும் டாப் ஹீரோக்களின் படங்கள் இரண்டாவது நாளிலேயே வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. இதுதான் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலையாக இருக்கிறது.
சேரன் போட்ட லிஸ்ட்
இதை இயக்குனர் சேரன் வருத்தத்தோடு பதிவு செய்துள்ளார். இங்கு எல்லாமே வியாபாரம் தான். பணத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனாலேயே நல்ல கதைகள் வருவது அரிதாக உள்ளது.
இப்போதும் நல்ல கதைகளை கொடுத்த இயக்குனர்கள் அடுத்த படத்திற்காக போராடத்தான் செய்கிறார்கள். அப்படி ஐந்து டைரக்டர்கள் பெயரை அவர் வரிசைப்படுத்தியுள்ளார்.
அதன்படி மெய்யழகன் படத்தை கொடுத்த பிரேம் குமார், குடும்பஸ்தன் புகழ் ராஜேஸ்வர் காளிசாமி, டாடா இயக்குனர் கணேஷ் கே பாபு, லப்பர் பந்து தமிழரசன் பச்சமுத்து, சமீபத்தில் வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஆகியோருக்கு மிகப்பெரிய சல்யூட்.
வியாபாரமாகிப் போன திரையுலகில் நல்ல கதைகளை இவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என சேரன் மனதார பாராட்டி இருக்கிறார். உண்மையில் அவர் ஆதங்கம் சரியானது தான்.
நல்ல கதைகள் இருந்தும் பான் இந்தியா படம் எடுக்க வேண்டும். 1000 கோடி 2000 கோடி லாபம் பார்க்க வேண்டும் என எல்லோரும் கமர்சியல் படங்களுக்கு மாறிவிட்டனர்.
ஹீரோக்கள் கூட அப்படி இருந்தால் தான் நடிப்பேன் என்கிறார்கள். எதார்த்த கதையை யாரும் தேர்ந்தெடுப்பதில்லை அதனாலேயே குடும்ப ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவதை தவிர்த்து விடுவதும் குறிப்பிடத்தக்கது.