அஜித் 180 கோடிகள் சம்பளம் வாங்குகிறார். படம் ஆரம்பிப்பதற்கு முன் 50 சதவீதம் அவருக்கு கொடுத்தாக வேண்டுமாம். அதன்பின் ஒவ்வொரு மாதமும் சூட்டிங் நடைபெறும் போது ஐந்து கோடிகளாக அவருக்கு கொடுத்து செட்டில் செய்து விட வேண்டுமாம். இப்படி படம் முடிவதற்குள் மொத்த காசையும் வாங்கி கொள்வாராம்.
இந்த சம்பள காசுகள் அனைத்தையும் அவருடைய துபாயில் உள்ள வங்கி அக்கவுண்ட்க்கு அனுப்பிவிடனுமாம். இதில் தான் இப்பொழுது தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை எழுந்துள்ளது. துபாய் அக்கவுண்டுக்கு பணத்தை அனுப்புவதற்கு வங்கி பரிவர்த்தனைகளில் பல சிக்கல்கள் வருவதால் சங்கடப்படுகிறார்கள்.
அஜித்தை காட்டிலும் விஜய் மற்றும் ரஜினி இருவரும் இந்த விஷயத்தில் நல்லெண்ணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். படம் டப்பிங் முடிந்த பிறகு தான் மொத்த சம்பளத்தையும் வாங்கிக் கொள்கிறார்கள். அதுவரை தயாரிப்பாளர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் கொடுப்பதில்லையாம். உங்களுக்கு எப்படி சௌகரியமோ அதை செய்யுங்கள் என்று கூறி விடுவார்களாம்.
எல்லாத்துக்கும் மேல ஒரு படி மேலே சென்ற ரஜினி கொடுக்கும் போது தான் வாங்கிக் கொள்வாராம். இப்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜின் கூலி படத்திற்கு 120 கோடிகள் சம்பளம். இதுவரை 50 கோடிகள் தான் வாங்கி உள்ளாராம் ஆனால் படம் முழுவதும் முடிந்து விட்டதாம்.
ரஜினியை போல் விஜய்யும் தயாரிப்பாளர்கள் கொடுக்கும்போது தான் சம்பளம் வாங்கிக் கொள்வாராம். இப்படி இருக்கும் இவர்கள் மத்தியில் அஜித் ஏன் இப்படி சம்பளம் விஷயத்தில் தயாரிப்பாளர்களின் குரவளையை பிடிக்கிறார் என்று தெரியவில்லை.