தனம் சீரியலில் Night சவாரி முடித்து வீட்டிற்கு வந்த தனம் அத்தை எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டுட்டு தூங்க வேண்டியது தானே என்று ருக்குவிடம் கேட்கிறாள். என் பையன் மூர்த்திக்கு வெயிட் பண்ற மாதிரி தான் உனக்கும் வெயிட் பண்ணுகிறேன் என்று சொல்கிறாள் ருக்குமணி பிறகு இரண்டு பேரும் சாப்பிட்டு தூங்க போறாங்க.
என்னாச்சு தனம்? அத்த என்னத்த நீங்க போய் என் கால எல்லாம் பிடிச்சு விட்டுட்டு என்று தனம் கேட்கிறாள். இருக்கட்டும் தனம். என் பிள்ளைக்கு கால் பிடிச்சு விடுறதுல எனக்கு எவ்வளவு சுகம் இருந்தது தெரியுமா அந்த சந்தோஷம் எனக்கு ரொம்ப நாள் நிலைக்கலம்மா.
இப்போ மறுபடியும் உனக்கு கால் அமுக்கி விடுறதுல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமா என்று ருக்குமணி சொல்கிறாள். சண்முகம் சௌந்தர்யா விஷயமா நான் உங்ககிட்ட பேசி இருந்தேனே இத பத்தி நீங்களும் அம்மா கிட்ட பேசுறேன்னு சொல்லிருந்தீங்க பேசுனீங்களா என்று கேட்கிறான்.
தனம் இன்னும் இல்ல சண்முகம் நான் வேணா பேசிட்டு சொல்லவா என்று கேட்க சண்முகம் சீக்கிரம் ஒரு நல்ல முடிவா சொல்லுங்க சிஸ்டர் என்கிறான். தனம் ருகுமணியிடம் அத்தை உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் நேத்து சண்முகம் என்கிட்ட பேசுனாரு அவருக்கு இப்பவும் நம்ம சௌந்தர்யாவ கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு விருப்பம் இருக்காம். அதான் அத பத்தி பேசுறதுக்கு உங்களோட அபிப்பிராயம் என்னன்னு கேட்டு சொல்ல சொன்னாரு இப்ப என்னத்த சொல்றது என்று கேட்கிறாள்.
நாம என்ன சொல்றது தனம் எனக்கும் அதா புரியல அதனாலதான் நானும் அவர்கிட்ட எதுவுமே சொல்லல. வேண்டாம் தனம் இந்த கல்யாணம் நடத்த சண்முகம் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. அம்மா விருப்பம் இல்லாமல் எப்படி கல்யாணம் பண்ண முடியும். ஷண்முகத்திடம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிடு என்கிறாள் ருக்குமணி.
இதற்கிடையில் தனம் surprise ஆக நிலா பர்த்டே பார்ட்டி கு செல்கிறாள். இதை பார்த்து நிலா ரொம்ப சந்தோசபடுகிறாள். நிலாவுக்கு தனம் தான் வாங்கிட்டு வந்த டிரஸ் யையும் மோதிரத்தையும் கொடுக்கிறாள்.
நிலா உடனே தன்னுடைய அப்பா பர்த்டே கு வாங்கிக்கொடுத்த டிரஸ் போடாமல் தனம் வாங்கிக்கொடுத்த டிரஸ் போடுகிறாள். இதனால் ராதிகா நிலா மீதும் தனம் மீதும் கோபப்படுகிறாள்.
பின்னர் எல்லாரும் கோவிலுக்கு சென்று நிலா பேரில் அர்ச்சனை செய்றாங்க. கோவில் பூசாரி நிலாவை பார்த்து பாப்பா நீ அப்படியே வானத்தில் இருக்கிற நிலா மாதிரி இருக்கிற என்று சொல்கிறார்.