Ajith-Cheran: விருதுக்கு பெயர் போனவர் தான் இயக்குனர் சேரன். அவருடைய ஒவ்வொரு படங்களும் எதார்த்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து என ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ரகம் தான்.
அப்படிப்பட்ட இயக்குனரிடம் ஒரு நடிகை நீங்களா ஹீரோ. நான் அஜித் சார் கூட நடிக்கணும்னு வந்தேன் என சொல்லி இருக்கிறார். இதை சேரன் ஒரு பேட்டியில் ஜாலியாக கூறியிருக்கிறார்.
அந்த நடிகை வேறு யாரும் கிடையாது. சொல்ல மறந்த கதை படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்த ரதி தான். தங்கர் பச்சான் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது.
சேரனை அவமானப்படுத்திய நடிகை
அந்த படத்தில் சிவதானு என்ற கதாபாத்திரத்தில் சேரன் நடித்திருப்பார். அப்போது படப்பிடிப்பின் முதல் நாள் ஹீரோயின் நீங்களா ஹீரோ என மேற்கண்ட வசனத்தை சொல்லி இருக்கிறார்.
உடனே சேரன் கோபப்படாமல் என்னமா பண்றது என்னோட நடிக்கணும்கிறது விதி என சொல்லி இருக்கிறார். அதன் பிறகு நடிகையும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இந்த தகவலை சொன்ன சேரன் இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தையும் சொல்லி இருக்கிறார். அதாவது அந்த படத்தின் தாக்கம் சில மாதங்கள் எனக்கு இருந்தது. சொல்லப்போனால் என் மனைவி பிள்ளைகளை கூட மறந்து விட்டேன்.
சிவதானு அவருடைய குடும்பம் அதுதான் என் நினைவில் இருந்தது. இதனால் என்னுடைய அடுத்த படத்திற்கு சில மாதங்கள் கழித்து தான் கதை எழுதினேன் என சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்து உள்ளார்.