Suriya: தமிழ்நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் அதற்கு சூர்யா என் குரல் கொடுக்க மறுக்கிறார் என்ற கேள்வி தான் முதலில் வருகிறது. இதற்கு காரணம் இந்த வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த பல விஷயங்களை குரல் கொடுத்தது தான்.
அப்போது வேறு அரசு இருந்தது, இப்போது வேறு அரசு இருக்கிறது அதனால் தான் சூர்யா வாயை மூடி கொண்டிருக்கிறார் என சொல்லப்படுகிறது. இது குறித்து தற்போது வீடியோ ஒன்று வைரலாகி கொண்டு இருக்கிறது.
அரசியல் பேசியதை நிறுத்தியதற்கு காரணம்
ரெட்ரோ பட சமயத்தில் சந்தோஷ் நாராயணன் சூர்யாவிடம் இது பற்றி கேட்டதற்கு, சூர்யா நிதர்சனமான பதிலை கொடுத்திருக்கிறார். நீட் தேர்வு பற்றி நான் பேசியது என் அகரம் அறக்கட்டளை மாணவர்களின் நிலைமையை மாற்றுவதற்கு தான்.
ஆனால் அதன் பின்னர் அறக்கட்டளைக்கு நெகட்டிவ் ஆக நிறைய விஷயங்கள் மாறியது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் சில விஷயங்களை பேசுவதை தவிர்த்து வருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
சூர்யா அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். நீட் தேர்வு வந்த பிறகு அந்த அறக்கட்டைளையில் இருந்து டாக்டருக்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமாக குறைந்து விட்டது.
இந்த ஆதங்கத்தை தான் அவர் தெரியப்படுத்தி இருந்தார். ஆனால் ஆளும் அரசுக்கு எதிராக சில விஷயங்கள் பேசும் பொழுது அறக்கட்டளைக்கு வரும் பண உதவிகள் தடுக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
அதேபோன்று அறக்கட்டளைக்கு செய்ய வேண்டிய சில விஷயங்களுக்கு அரசு ரீதியாக அனுமதி கிடைக்காமல் தடுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் தான் சூர்யா அரசியல் பற்றி பேசாமல் இருக்கலாம்.