ரஜினி : சினிமா உலகையே ஆட்டிப்படைக்கும் நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் தான். வயசானாலும் அந்த ஸ்டைலும், அழகும் இன்னும் குறையாமல் அப்படியே வைத்திருக்கிறார் ரஜினிகாந்த்.
ஆர்வத்துடன் காத்திருப்பு..
எவ்வளவு வயசானாலும் ரஜினியின் படத்திற்கு எப்போதும் மக்களிடையே எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதே வரிசையில் எப்போது கூலி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜெயிலர் படத்தில் அப்பா கதாபாத்திரம் என்றாலும் திரையில் ஒரு ஹீரோவை பார்ப்பது போல தான் தோன்றியது. அந்த அளவுக்கு நடிப்பில் பட்டையை கிளப்பி விட்டார் ரஜினி.
ஜெயிலர் படத்தின் ஒட்டு மொத்த வசூல் 650 கோடியாகும். இந்த படத்திற்கு கிட்டத்தட்ட 210 கோடி சம்பளம் வாங்கினார் ரஜினி. நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து கலக்கிய இத்திரைப்படம் எதிர்பாராதளவு வெற்றியை கொடுத்தது.
யாரும் எதிர்பாராத ஒன்று..
தற்போது ரஜினி நடித்து முடித்த கூலி திரைப்படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட ஜெயிலர் படத்தின் வசூலை எட்டியுள்ளது. சினிமா வட்டாரத்தில் யாரும் இது எதிர்பாராத ஒன்றுதான்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் சம்பளம் அடுத்த படத்திற்கு மேன்மேலும் அதிகமாகும் என சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.