Ajith : அஜித்தின் 64ஆவது படத்தை பற்றிய செய்திகள் தான் இப்போது இணையத்தில் உலாவி வருகிறது. குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் இணைகிறார். 300 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருக்கிறது.
அஜித்தின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இந்த படம் உள்ளது. இதில் ஆதி ரவிச்சந்திரனுக்கு 12 கோடியும், அஜித்துக்கு 180 கோடியும் சம்பளம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.
கேஜிஎஃப் படத்தில் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீநிதி ஷெட்டி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மேலும் மலையாள நடிகர் மோகன்லால் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
ஏகே64 படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்
சில காரணங்களினால் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகி விட்டனர். இப்போது ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் ஏகே 64 படத்தை கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ரோமியோ பிக்சர்ஸ் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகம் செய்து வருகிறது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்களை இந்நிறுவனம் தான் தமிழ்நாட்டில் விநியோகம் செய்கிறது. தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படத்தையும் இந்த படம் தான் வெளியிட்டது.
இப்போது அஜித் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் தரப்பிலிருந்து அனிருத்தையும், ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பிலிருந்து ஜிவி பிரகாசையும் அணுகி வருகின்றனர். ஆகையால் ஏகே 64 படத்திற்கு யார் இசையமைப்பது என்பது விரைவில் தெரியவரும்.