Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் மற்றும் நடிகருமான விஜய் பீனிக்ஸ் படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை கூறியிருக்கிறார். சண்டை இயக்குனரான அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் பீனிக்ஸ் வீழான் படம் உருவாகி இருக்கிறது.
இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் மகன் முதன்முதலாக ஹீரோவாக இறங்கி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பீனிக்ஸ் படத்தில் சண்டைக் காட்சிகள் நிறைய இருப்பது ட்ரெய்லரிலேயே தெரிந்தது.
இந்த சூழலில் விஜய் ஃபீனிக்ஸ் படத்தை பார்த்து விட்டு Bloody Sweet என்று கூறி இருக்கிறார். மேலும் சூர்யா சேதுபதி மற்றும் அனல் அரசு ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
பீனிக்ஸ் படத்திற்கு விஜய் கொடுத்த விமர்சனம்
நேற்றைய தினம் விஜய் சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை காவலில் இருந்து உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் அஜித் குடும்பத்திற்கு இரண்டு லட்சம் நிதி உதவியும் வழங்கி இருந்தார்.
இந்த சூழலில் மறுநாள் பீனிக்ஸ் படத்தை பார்த்துவிட்டு தனது பாராட்டுகளையும் கூறியிருக்கிறார். நடிகர் மற்றும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற இரண்டிலுமே தனது கடமையை தவறாமல் செய்து வருகிறார் என்பதற்காக இதுவே உதாரனமாக அமைந்திருக்கிறது.
மேலும் நாளை பீனிக்ஸ் படத்துடன் 3BHK, பறந்து போ போன்ற படங்கள் வெளியாகிறது. எல்லா படத்திற்குமே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் இதில் எந்த படம் அதிக வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.