Cinema : தற்போது திரையுலம் அட்வான்ஸ் லெவெலில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு படம் வெளியானால் அதிசயம். அப்படி வெளியான அனைத்து படமும் நல்ல வேறுவகை சூட்டியுள்ளது. அப்போதல்லாம் டெக்னாலஜி குறைவு. அப்படிபட்ட காலத்தில் படம் வெற்றிபெற்றது.
இப்போதல்லாம் தொழில்நுட்பம் அதிகம் அதனால் வெளியாகும் படங்களும் அதிகம். ஆனால் வெற்றிவிகிதம் குறைவாகவே இருக்கிறது. காரணம் ஒரு வருடத்திற்கு வெளியான படம் போய், ஒரு நாளைக்கு எத்தனை படம் என்ற கணக்கிற்கு வந்துவிட்டது.
தற்போது ஜூலை 4, 2025 அன்று ஒரே நாளில் வரிசைகட்டி படங்கள் ரிலீஸ் ஆக போகின்றன. இதில் எத்தனை படங்கள் வெற்றியடைய போகின்ற என்று தெரியவில்லை. எந்த படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆக போகின்றன என்று வரிசையாக பார்க்கலாம்.
இந்த வார ரிலீஸ் போட்டி போடும் 6 படங்கள்..
சரத்குமார், சித்தார்த் நடிக்கும் “3BHK”, அருண் பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இணைந்து நடிக்கும் “அஃகேனம்”, விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவிக்கும் “பீனிக்ஸ்”, சுந்தரகிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள “அனுக்கிரகன்” என்ற படம்.
“ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்” என்ற டப்பிங் படம் மற்றும் நடிகர் சிவா நடித்து வெளிவரவிருக்கும் படம் “பறந்து போ” ஆகிய 6 படங்கள் ஜூலை 4 அன்று வெளியாக உள்ளன. ஆக மொத்தம் பறந்து போ படமும் 3BHK படமும் நேருக்கு நேராக மோத போகின்றன. எந்த படம் இந்த வார முதலிடத்தை பிடிக்கும் என பார்க்கலாம்.
இத்தனை படங்களில், எந்தத்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற போகின்றன என பொறுத்திருந்து பார்க்கலாம். ஆக மொத்தம் ஒரே நாளில் நல்ல வசூலை பெறப்போகிறது சினி உலகம். இந்த வார விடுமுறைகளில் பார்ப்பதற்கு தரமான படங்கள் தயாராக உள்ளன மறந்து கூட மிஸ் பண்ணிடாதீங்க.