சசிகுமார் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நடிகர் சசிகுமார். 2008-இல் சுப்பிரமணியபுரம் படத்தில் இயக்குனராக சினிமாவில் கால் பதித்தார்.
2012-இல் வெளிவந்த சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் ஆழமாக நின்றவர் சசிகுமார்.
அதை தொடர்ந்து சசிகுமார் பல வெற்றி படங்களை குவித்தாலும், இந்த வருடம் (2025) வெளியான டுரிஸ்ட் பேமிலி திரைப்படம் அனைத்து தமிழ் மக்களின் மனதையும் வென்றது.
முதல் அவதாரம்..
இந்த வருடம் 2025-இல் சசிகுமாரின் முதல் அவதாரமாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அபிஷன் ஜீவிந்த் என்ற புதுமுக இயக்குனரால் திரையில் வெளியிடப்பட்டது. இந்த படம் முழுவதும் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சசிகுமாருக்கு சிம்ரன் ஜோடியாக நடித்திருப்பது தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது.
அவதாரம் 2..
தற்போது சசிகுமார் நடித்து முடித்த freedom என்ற திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. அதிகாரப்பூர்வமாக இத்திரைப்படம் வரும் ஜூலை 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.
மீண்டும் ஜெயிப்பாரா..??
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் முற்றிலும் குடும்ப கதை. ஆனால் freedom திரைப்படத்தின் ட்ரைலர் பார்க்கும்போது, முற்றிலும் சமூக நீதி சிந்தனை கலந்து, சட்டத்தை மீறி ஒரு நபரை மையமாக எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் போலவே வெற்றி கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.