Sirakadikkum Asai Serial: சீரியலில் நடித்தாலே பொதுமக்களிடம் பரிச்சயம் ஆகிவிடலாம், அதன்மூலம் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று பிரபலமாகி தனக்கான ஒரு அங்கீகாரத்தை நிலை நிறுத்த முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை. அப்படித்தான் விஜய் டிவி சீரியல் மூலம் புதுசாக கதாநாயகியாக நடந்த ஒரு நடிகை கிட்டத்தட்ட 800 எபிசோடுக்கு மேல் நடித்து பிரபலமாகிவிட்டார்.
ஆனால் அதில் அவருடைய கேரக்டர் நெகட்டிவ் என்பதால் போகப் போக இவருடைய இமேஜ் டேமேஜ் ஆகும் அளவிற்கு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். இன்னும் சொல்ல போனால் இவரால் தான் இந்த நாடகமே சோத்துக் கொண்டு வருகிறது என்பதற்கு ஏற்ப கேரக்டர் அடி வாங்கிவிட்டது. ஆனாலும் விஜய் டிவியில் இந்த ஒரு சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
அதாவது சிறகடிக்கும் ஆசை சீரியல் மூலம் ரோகிணி கேரக்டர் பிரபலமாகி இருக்கிறது. இவருடைய உண்மையான பெயர் சல்மா அருண். முதன் முதலாக விஜய் டிவியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்துதல் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வினோதினி என்ற புது சீரியலில் மூலம் புதுசாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வினோதினி சீரியலில் ஹீரோவாக நடிக்கும் கிருஷ்ணாவுக்கு மனைவியாக இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. ஆனால் எப்படி சிறகடிக்கும் ஆசை சீரியலில் ரோகிணி கேரக்டர் நெகட்டிவ் ஆகவும் மக்கள் வெறுக்கும் அளவிற்கு ஒரு கதாபாத்திரம் இருக்கிறதோ, வினோதினி சீரியலிலும் அமைந்திருக்கிறது. ஏற்கனவே விஜய் டிவி மூலம் இப்படி ஒரு இடம் பெயரை சம்பாதித்தார்.
மறுபடியும் சன் டிவியில் அதே மாதிரி ஒரு கேரக்டர் தேர்வு செய்து நடிப்பதற்கு உண்மையிலேயே சல்மா அருணுக்கு தைரியம் தான் என்று மக்கள் கமெண்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் புதுசாக சன் டிவி சீரியலுக்குள் நுழைந்திருக்கும் இவர் அடுத்தடுத்த பெரிய வாய்ப்புகளைப் பெற்று தனக்கான அங்கீகாரத்தை நிலை நிறுத்துவார் என்றும் சின்னத்திரை விரும்பி பார்க்கும் மக்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.