Sun Tv Serial: சன் டிவியில் கிட்டத்தட்ட 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் இன்னும் அடுத்தடுத்து சீரியல்கள் வருவதற்கு வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பழைய சீரியல்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டும் அளவிற்கு முடிப்பதற்கு சன் டிவி சேனல் தயாராகிவிட்டது.
இதில் முதலில் முடிவுக்கு வரப்போகும் சீரியல் செவ்வந்தி. இந்த சீரியல் ஆரம்பித்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஆகி 870 எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் தற்போது கதைகள் எல்லாம் ஒன்றாக கூடி வருவதால் இந்த நாடகத்தை முதலில் தூக்குகிறார்கள்.
இதற்கு பதிலாக வினோதினி என்ற சீரியலின் நேரம் மாறப்போகிறது. இதனைத் தொடர்ந்து புது வசந்தம் என்கிற சீரியலும் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்கள் ஆன நிலையில் 500 எபிசோடு தாண்டி இருக்கிறது. இந்த சீரியலும் முடிவுக்கு வரப்போகிறது. இதற்கு பதிலாக பராசக்தி என்ற புது சீரியல் ஒளிபரப்பாக போகிறது.
அடுத்ததாக தினமும் 3 மணிக்கு ஆனந்த ராகம் என்ற சீரியலின் கிளைமாக்ஸ் கூடிய சீக்கிரத்தில் கொண்டு வரப் போகிறார்கள். இதற்கு பதிலாக இரு மலர்கள் என்ற சீரியல்கள் ரெண்டு ஹீரோயினை மையமாக வைத்து வரப்போகிறது. இதனை தொடர்ந்து தினமும் 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் என்ற சீரியலும் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிக்கப் போகிறார்கள்.
இதற்கு பதிலாக டப்பிங் ஒரு சீரியல் புதுசாக வரப்போகிறது. மேலும் மல்லி சீரியலும் முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். ஏனென்றால் எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்காததால் முடித்து விடலாம் என்று சன் டிவி சேனல் முடிவெடுத்து விட்டார்கள். இப்படி கிட்டத்தட்ட 5 சீரியல்கள் முடிவுக்கு வருவதால் புது புது சீரியல்களை அடுத்தடுத்து கொண்டு வரப் போகிறார்கள்.