Pradeep : நடிகரும், இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் அவர்கள் தற்போது பழக்கப்பட்ட ஹீரோக்கள் அனைவரையும் மென்று சாப்பிடும் வகையில் நடிப்பில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகர். இவர் இயக்கிய “கோமாளி” என்ற படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர்.
கோமாளி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. மற்றும் நல்ல கதை களத்துடன் அமைந்ததால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் அவர்களுக்கு ஹீரோவாக நடிக்க ஆசை வரவே அவர் தேர்ந்தெடுத்து இயக்கிய படம் தான் “லவ் டுடே”.
இந்த “லவ் டுடே” படம் மூலம்இவர் இயக்குனர் மட்டுமல்ல நல்ல கதாநாயகன் கூட என்கிற அளவிற்கு பிரபலமாக பேசப்பட்டார். இவர் நடிப்பில் வெளிவந்தது குறிப்பிட்ட சில படங்களில் இருந்தாலும் கூட அனைவரும் மனதிலும் இடம்பெற்ற ஒரு நபராகவே இருந்து கொண்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
“லவ் டுடே”-க்கு அடுத்து இவர் நடித்த படம் தான் “டிராகன்” இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. நகைச்சுவை கலந்த நடிப்பில் அனைவரையும் ஈர்த்து கலக்கிக் கொண்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன் என்று கூறலாம். விஜய் அஜித் அவர்களுக்கு அப்பாற்பட்டு அடுத்ததாக வரும் தலைமுறைகளுக்கு பிடித்த நடிகராக வலம் வரப்போகிறார் பிரதீப் ரங்கநாதன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இவர் அடுத்ததாக விக்னேஷ் சிவன் நடிப்பில் வெளி வரவிருக்கும் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நான்காவது படமான “டியூட்” படத்திலும் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
விஜய், அஜித்தை ஓரம்கட்டிய பிரதீப்..
தற்போது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் “டியூட்” படத்தின் உரிமையை 25 கோடி கொடுத்து தற்போது “Netflix” நிறுவனம் வாங்கியிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு நடைபெறும் போட்டிபோல் உள்ளது, பிரதீப் ரங்கநாதன் அவர்ளுக்கும் தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ளது.இவர் தமிழ் சினிமாவில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்வார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.