Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. துளசி கொடுத்த தாலியோடு அன்பு ஆனந்தியின் சொந்த ஊருக்கு வந்து விட்டான். இங்கு வந்த பிறகுதான் சுயம்புலிங்கம் ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டிருப்பது அவனுக்கு தெரிகிறது.
ஆனந்தியின் வீட்டிற்கு அன்பு வரும்போது அவனை ஏற்கனவே ரொம்ப மிஸ் பண்ணும் ஆனந்தி ஓடோடி வந்து அவன் அருகில் நிற்கிறாள்.
கதி கலங்கி போகும் ஆனந்தி!
இருந்தாலும் மனதை கல்லாக்கி கொண்டு ஒரு உறவை ஒரு தரப்பில் இருந்து மட்டும் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது, அது அன்பு கிடையாது என எக்கசக்க வசனங்கள் எல்லாம் பேசுகிறாள்.
ஆனந்தி ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் தன்னை விட்டு விலகுகிறாள் என்பது அன்புக்கு தெரியும் என்பதால் அவள் பேசுவதை எல்லாம் அவன் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த காட்சியில் ஆனந்தி, அன்புவை வீட்டிற்குள் உட்கார வைத்து சாப்பாடு பரிமாறுவது போல் காட்டப்படுகிறது.
அந்த நேரத்தில் அங்கே வரும் கோகிலா அன்பு விடம் பேசுகிறாள். மேலும் அன்புவை மாப்பிள்ளை என்று அழைக்கிறாள். இது அன்புக்கு உச்சகட்ட சந்தோஷத்தை தருகிறது. ஆனந்தி தன்னை காதலிப்பதை அவள் அக்காவிடம் சொல்லி இருப்பது அவனுக்கு தெரிய வருகிறது.
அதே நேரத்தில் அந்த கிராமத்தில் ஏதோ ஒரு வயசு பெண் புத்தி பேதலித்தது போல் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண் கர்ப்பமாக இருப்பது போலவும் காட்டப்படுகிறது.
ஆனந்தி அந்த பெண்ணை பற்றி விசாரிக்கும் போது அவளுடைய கர்ப்பத்தின் காரணத்தால் அவளை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என ஆனந்தியின் அம்மா சொல்கிறார். மேலும் இவளால் மற்ற பெண் கெட்டுவிடக்கூடாது இவளை ஒதுக்கி வைத்தது நியாயம் தான் என ஆனந்தியிடம் சொல்கிறார்.
ஆனந்திக்கு இது குற்ற உணர்ச்சியாக மாறி கதி கலங்கி போய் நிற்கிறாள். இதை எல்லாம் தூரத்தில் இருந்து அன்பு கவனித்துக் கொண்டிருக்கிறான். கண்டிப்பாக அந்த புத்தி பேதலித்த பெண்ணுக்கு ஆதரவாக அன்பு ஏதோ செய்யப் போகிறான். இதனால் ஆனந்தி மனது மாறவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.