Rajini : ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. அண்மையில் இந்த படத்தில் அமீர்கானின் கதாபாத்திரத்தை படக்குழு வெளியிட்டு இருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் ரஜினி மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி போட்டிருக்கும் படம் தான் ஜெயிலர் 2. நெல்சன் இந்த படத்தில் முதல் பாகத்தை எடுத்த நிலையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இதைத்தொடர்ந்து இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ரஜினி கேட்கும் சம்பளம் தான் கலாநிதி மாறனை தலைசுற்ற வைத்திருக்கிறது. அதாவது கூலி படத்தில் ரஜினியின் சம்பளம் 120 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது.
டபுள் மடங்காக சம்பளத்தை உயர்த்திய ரஜினி
இப்போது தனது சம்பளத்தை டபுள் மடங்காக்கி ஜெயிலர் 2 படத்திற்கு 250 கோடி கேட்கிறாராம். இதனால் சன் பிக்சர்ஸ் என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கத்தில் இருந்து உள்ளனர். இப்போது விஜய்யின் சம்பளம் ஜனநாயகன் படத்திற்கு 250 கோடியாகும்.
அதேபோல் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்திற்கு 180 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இவ்வாறு படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக இருப்பது தயாரிப்பாளர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.
படம் ஹிட்டானாலும், தோல்வியானாலும் அது தயாரிப்பாளர்களை தான் சேருகிறது. ஹீரோக்கள் அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்திச் சென்று போகிறார்கள். மேலும் இப்போது சன் பிக்சர்ஸ்சும் ரஜினி கேட்ட சம்பளத்தை கொடுக்க முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.